- Home
- Cinema
- Pandian Stores 2 : நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்ன மயிலு – மறுபடியும் பொய்யா என்று திட்டி தீர்த்த சரவணன்!
Pandian Stores 2 : நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்ன மயிலு – மறுபடியும் பொய்யா என்று திட்டி தீர்த்த சரவணன்!
Pandian Stores 2 Thangamayil Pregnant : சரவணனிடம் மாமா நான் கர்ப்பமாக இருக்கிறேன், நீங்கள் அப்பாவாக போறீங்க என்று தங்கமயில் சொல்ல அதற்கு அவர் கடுமையாக திட்டி தீர்த்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
Pandian Stores 2 Thangamayil Pregnant : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய 508ஆவது எபிசோடானது கோபமாக இருக்கும் தனது மனைவி மீனாவை செந்தில் சமாதானப்படுத்த முயற்சி காட்சியுடன் தொடங்குகிறது. மீனாவின் ஆபிஸிற்கு வந்த சரவணன், நான் எப்படியாது ரூ.10 லட்சம் ரெடி பண்ணி வங்கியில் கட்டிவிடுகிறேன். அதுவரையில் நீ அப்பாவிடம் சொல்லாமல் இருந்தால் போதும் என்று செந்தில் கெஞ்சுகிறார். எத்தனை நாட்கள் என்னால் சும்மா இருக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை என்று மீனா பதிலளிக்கிறார்.
மீனாவை சமாதானப்படுத்தும் செந்தில்
இதைத் தொடர்ந்து வா வெளியில் சென்று சாப்பிட்டு விட்டு வரலாம் என்று அழைக்க முடியாது என்று மீனா சொல்லிவிட்டு தனது வேலையை கவனிக்க சென்றுவிடுகிறார். வேறு, வழியில்லாமல் செந்திலும் கடைக்கு திரும்புகிறார். பின்னர், எப்படியாவது ரூ.10 லட்சம் ரெடி பண்ண வேண்டும் என்ற யோசனையில் மீனா தனது அப்பாவிற்கு போன் போடுகிறார். இதில், அப்பாவோ வேலைக்காக கொடுத்த பணத்தை அதற்குரியவரிடம் கொடுத்துவிட்டேன் என்று சொல்லிவிட்டார்.
ரூ.10 லட்சத்திற்கு லோன் வாங்க பிளான் போடும் மீனா
எப்படியாவது ரூ.10 லட்சம் ரெடி பண்ண வேண்டும் என்பதற்காக லோன் வாங்க பிளான் பண்ணுகிறார். உடனே கிடைத்துவிடுமா என்ற சந்தேகமும் அவருக்கு வருகிறது. அதோடு அவரது காட்சி முடிகிறது. எப்படியும் அவரது பிளான் ஒர்க் அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட தங்கமயில்:
இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 2ஆவது காட்சியாக தங்கமயில் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், தங்கமயில் எப்படியும் என்னுடைய கணவர் என்னை கூப்பிட வரமாட்டார். அதனால் நான் வேறு எங்காவது சென்றுவிடுகிறேன் என்று வருத்தமாக கூறினார். அப்போது தங்கமயிலின் அப்பா நாம் ஏன் கோயிலுக்கு செல்ல கூடாது என்று கேட்கிறார்.
அந்த நேரம் பார்த்து இப்போது உனக்கு டேட் டைம் ஆச்சு என்கிறார். ஆனால், நான்,அதைப் பற்றி யோசிக்கவில்லை. எனக்கு போன மாதம் தள்ளிப் போனது என்று கூற இதில் உற்சாகமான பாக்கியம், உடனடியாக மெடிக்கலுக்கு சென்று பிரக்னன்ஸி கிட் வாங்கிக் கொண்டு வந்தார். இதில் தங்கமயில் பார்த்த போது 2 கோடு காட்டியது. இதனால், அளவில்லா மகிழ்ச்சி அடைந்த தங்கமயில் இதைப் பற்றி அம்மாவிடம் சொல்லி பேரானந்தம் கொண்டார். மேலும், கணவருக்கு தெரியப்படுத்த போன் போட சரவணன் எடுக்கவில்லை.
கணவருக்கு வாட்ஸ் அப் நோட் அனுப்பிய தங்கமயில்:
பிறகு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட் அனுப்பினார். இதில் நாம் இருவரும் ஆசைப்பட்டது இப்போது நிறைவேறிவிட்டது. நான் கர்ப்பமாக இருக்கிறேன். நீங்கள் அப்பாவாக போறீங்க என்று கூறி பரவசம் அடைந்தார். ஆனால், அதையெல்லாம் கேட்ட பிறகு சரவணன், எனக்கு எதற்கு திரும்ப திரும்ப போன் போடுகிற, இன்னும் எத்தனை பொய் தான் சொல்லுவீங்க. நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டு நான் ஏமாற தயாராக இல்லை என்று கூறிவிட்டார்.
தங்கமயில் டிகிரி முடிக்கவில்லை, ஹோட்டலில் சர்வர் வேலை:
சரவணனுக்கு தங்கமயில் டிகிரி முடிக்கவில்லை என்பது மட்டும் தெரியும். மேலும், ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்து கொண்டு ஆபிஸில் வேலை பார்ப்பதாக பொய் சொல்லி நாடகமாடியதை சரவணன் தெரிந்து கொண்டார். ஆனால், அவருக்கு போடப்பட்ட நகைகளில் ஒரு சில தங்க நகைகள் தவிர மற்ற நகைகள் எல்லாம் கவரிங். இதைப் பற்றி இன்னும் சரவணனுக்கு தெரியவில்லை. இப்படி அடுக்கடுக்கான பொய் சொல்லி ஏமாற்றியதைத் தொடர்ந்து உண்மை சொன்னால் கூட அது பொய்யாகவே தோன்றுகிறது.
அரசி மற்றும் குமரவேல் ரகசிய திருமணம்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் மற்றும் மீனா, சரவணன் மற்றும் தங்கமயில் ஆகியோர் தொடர்பான காட்சிகள் இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கதிர் மற்றும் ராஜீயின் காட்சிகளுக்கு மட்டும் இன்னும அந்தளவிற்கு ஆழம் கொடுக்கப்படவில்லை. இதே போன்று அரசி மற்றும் குமரவேல் தொடர்பான காட்சிகள் அதிகளவில் சீரியலில் இடம் பெறுகின்றன. என்னதான் அரசி தனக்கு தானே திருமணம் செய்து கொண்டாலும், குமரவேலுவை பழிதீர்க்க அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும், அரசியை கொலை செய்யக் கூட முயற்சி செய்திருக்கிறார். எனினும், அரசி அதிலிருந்து தப்பித்து வந்துள்ளார்.
பாண்டியனுக்கு எப்போது தெரியவரும்?
எது எப்படியோ இனி வரும் எபிசோடுகளில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சுவாரஸ்யம் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தின் மூத்த மருமகளான தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை எப்போது சரவணனின் குடும்பத்தினர் தெரிந்து கொள்வார்கள். சரவணன் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில் பாண்டியனுக்கு தெரியப்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.