- Home
- Cinema
- Pandian Stores: கதிருக்காக வெந்து போன ராஜீயின் கைகள்..! 2ஆவது பரிசு கிடைத்த வருத்தத்தில் கோமதி!
Pandian Stores: கதிருக்காக வெந்து போன ராஜீயின் கைகள்..! 2ஆவது பரிசு கிடைத்த வருத்தத்தில் கோமதி!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிருக்காகவே டான்ஸ் ஆடி அவரது கனவு பைக்கை ராஜீ வென்று கொடுத்துள்ளார். இதன் மூலமாக கதிர் மற்றும் ராஜீயின் காதல் காட்சிகள் சீரியலில் அதிகரித்துள்ளது.
- FB
- TW
- Linkdin
Follow Us

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 470ஆவது எபிசோடில் கதிர் மற்றும் ராஜீயின் காதல் காட்சிகள் காட்டப்படுகிறது. ஏற்கனவே 2 சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று 3ஆவது சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜீ இன்றைய எபிசோடில் கையில் அக்னி சட்டி ஏந்தியும், சூலத்தை ஏந்தியும் மாரியம்மன் பாடலுக்கு சூப்பராக டான்ஸ் ஆடி அசத்தினார். மேலும், எல்லோரிடமும் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
pandian storesதுடி துடித்துப்போன கதிர்:
ஆனால், கோமதி மட்டும் கையில் பூச்சட்டி எடுத்ததற்கு வருத்தப்படுகிறது. மேலும், கதிரும் துடி துடித்துப்போனார். கையெல்லாம் பூச்சட்டி எடுத்ததால் கைகள் வெந்து போய் சிவப்பாக இருந்தது. பொதுவாக பூச்சட்டி எடுப்பவர்கள் கையில் வேப்பிலையை வைத்துக் கொள்வார்கள். ஆனால், ராஜீ அப்படி எதுவும் வைத்துக் கொள்ளவிலலை. மாரியம்மன் பாடலுக்கு டான்ஸ் ஆடி முடித்ததும், முதல் பரிசுக்கான போட்டிக்கு ராஜீ போட்டியிட்டார்.
பைக் வெல்வதில் உறுதியாக இருக்கும் ராஜீ :
இதில், தனக்கு 2ஆவது பரிசாக பைக் தான் வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். ஆதலால் தனக்கு தெரிந்த பாடலுக்கு டான்ஸ் ஆடாமல் அப்படியே நின்றுவிட்டார். உண்மையில் ராஜீ தான் முதல் பரிசாக கார் ஜெயிப்பார் என்று எல்லோரும் ஆசைப்பட்டனர். ஆனால் அவர் முதல் பரிசுக்கு ஆசைப்படவில்லை. அவர் ஆசைப்பட்டதெல்லாம் 2ஆவது பரிசாக பைக். அதுவும் அந்த பைக் தனது கணவர் கதிர் ஆசைப்பட்ட கனவு பைக்.
கோமதிக்கு ஏமாற்றம்:
எதற்காக அந்த போட்டியில் ராஜீ பங்கேற்றாரோ அதே போன்று தான் அவர் அந்தப் போட்டியில் ஜெயித்து 2ஆவது பரிசு வென்றார். கோமதிக்கு ஒரு புறம் இது ஏமாற்றம் என்றாலும், 2ஆது பரிசாக கொடுக்கப்பட்ட அந்த பைக்கின் சாவியை பெற்றுக் கொண்ட ராஜீ அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அது கோமதி, செந்திலுக்கு வேண்டுமென்றால் புரியாமல் இருக்கும். ஆனால், மீனாவுக்கும் சரி, கதிருக்கும் சரி நன்றாகவே புரிந்தது.
கூடியது ராஜீ - கதிர் காதல்:
அப்போதுதான் கதிர் தனக்காக அந்த பைக்கை ராஜீ வாங்கி தருவேன் என்று சொன்னதை நினைத்துப் பார்த்தார். அதன்பிறகு அவரும் எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். அந்த காட்சியின் போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதல் வெளிப்பட்டது. அதோடு காதலிக்கும் காதல் ஜோடிகளுக்கு அவர்கள் உதாரணமாகவும் இருந்தனர். அப்படியொரு காதல் காட்சியை எடுத்த இயக்குனரையும் இப்போது வாழ்த்தி வருகின்றனர் ரசிகர்கள்.