சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்ட 'பாண்டியன் ஸ்டோர்' நடிகை! திருமண புகைப்படங்கள் இதோ..!
பாண்டியன் ஸ்டோர் சீரியல் மீனா கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த கவிதா கவுடா, சொந்த காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகினார். இவருக்கும் சீரியல் நடிகர் சந்தன்குமார் என்பவருக்கும் கொரோனா பாதுகாப்புகளுடன் எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், மற்ற சீரியல்களை டி.ஆர்.பி-யில் அடித்து நொறுக்கி கெத்து காட்டி வருகிறது 'பாண்டியன் ஸ்டோர்'. அண்ணன் தம்பிகளின் பாசமான நினைவுகளை மனதில் பதித்துள்ள இந்த சீரியலில் நடித்த நடிகை ஒருவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்த சீரியலை, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்து வருகிறார்கள்.
மேலும் இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருக்குமே தனி ரசிகர்கள் பட்டாலேமே உள்ளது. எனவே இந்த சீரியல் குறித்தும், இதில் நடிக்கும் பிரபலங்கள் குறித்து எந்த தகவல் வெளியானாலும் அது வைரலாகி விடுகிறது.
அந்த வகையில் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் துவங்க பட்ட போது, ஹேமாவிற்கு பதிலாக நடித்து வந்தவர், கவிதா கவுடா.
பின்னர் கன்னடத்தில் துவங்க பட்ட 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக இந்த சீரியலில் இருந்து விலகினார்.
தற்போது இவர் கன்னடத்தில் துவங்கி உள்ள 'குக் வித் கிறுக்கு' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.
கவிதாவுடன் சீரியலில் நடித்து வந்த சந்தன்குமார் என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்கள் காதலுக்கு பெற்றோரும் பச்சை கொடி காட்டியதை தொடர்ந்து, ஏப்ரல் மாதம் இருவருக்கும் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இதை தொடர்ந்து, இந்த காதல் ஜோடிகளின் திருமணம், கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடந்தது. இதை தொடர்ந்து, இவர்களது திருமண புகைப்படத்தை கவிதா கவுடா வெளியிட ரசிகர்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.