பையா முதல் தி லெஜண்ட் வரை... நடிகை நயன்தாரா இத்தனை ஹிட் படங்களை ரிஜெக்ட் பண்ணிருக்காரா?
நயன்தாரா தனது திரைப்பயணத்தில் பல படங்களை நிராகரித்துள்ளார். அந்தப் படங்கள் எவை, அவை பாக்ஸ் ஆபிஸில் எப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றன என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தி லெஜண்ட்
சரவணன் அருள் ஹீரோவாக அறிமுகமான படம் 'தி லெஜண்ட்'. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வைக்க அணுகினர், ஆனால் அவர் அதை நிராகரித்துவிட்டார். அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க ரெடியாக இருந்தனர். ஆனால் 100 கோடி கொடுத்தாலும் அப்படத்தில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டாராம் நயன்.
சென்னை எக்ஸ்பிரஸ்
ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனின் சூப்பர்ஹிட் படமான 'சென்னை எக்ஸ்பிரஸ்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதன்முதலில் படக்குழுவினர் நயன்தாராவை தான் அணுகினார்கள். அந்த சமயத்தில் நயன்தாரா சினிமாவை விட்டு விலகும் முடிவில் இருந்ததால் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை மிஸ் பண்ணினாலும் ஜவான் மூலம் ஷாருக்கான் உடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் நயன்.
பையா
லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்த படம் 'பையா'. அப்படத்தில் ஹீரோயினாக தமன்னா நடித்திருந்தார். அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் இதுவாகும். அவருக்கு முன்னதாக முதன்முதலில் நயன்தாராவை தான் இப்படத்தில் நடிக்க வைக்க இருந்தனர், ஆனால் அவர் அதை நிராகரித்துவிட்டார்.
ஒரு கல் ஒரு கண்ணாசி
உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமான படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. இப்படத்திலும் தயாரிப்பாளர்களின் முதல் தேர்வாக நயன்தாரா இருந்தார், ஆனால் அவர் அப்படத்தை நிராகரித்தார். அதற்கான காரணத்தையும் அவர் கூறவில்லை. இந்தப் படம் மக்களால் மிகவும் கொண்டாடப்பட்டது. இப்படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்தார்.
சிங்கம் 2
தென்னிந்தியாவின் சூப்பர் ஹிட் படமான 'சிங்கம் 2'-ல் முக்கிய வேடத்தில் நடிக்க முதலில் நயன்தாராவுக்கு தான் வாய்ப்பு கிடைத்தது. ஹரி அறிமுகம் செய்த நடிகை என்பதால், இதில் நயன்தாரா கண்டிப்பாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வேறு படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் சிங்கம் 2 படத்தை நிராகரித்தார்.
திருச்சிற்றம்பலம்
மித்ரன் ஜவஹர் இயக்கிய 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷுடன் நயன்தாராவை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் விரும்பினர், ஆனால் அவர் மறுத்துவிட்டார். இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஆனது.