MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அரியவகை நோய் பாதிப்பால் இளம் இசையமைப்பாளர் மரணம்... மாதம் 10 லட்சம் செலவழித்தும் காப்பாற்ற முடியாம போன சோகம்

அரியவகை நோய் பாதிப்பால் இளம் இசையமைப்பாளர் மரணம்... மாதம் 10 லட்சம் செலவழித்தும் காப்பாற்ற முடியாம போன சோகம்

மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்திய amyotrophic lateral sclerosis என்கிற அரியவகை நோய் பாதிப்பு தான் ரகுராமுக்கும் ஏற்பட்டு இருந்தது.

1 Min read
Author : Ganesh A
Published : Oct 30 2022, 07:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

வித்தார்த் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ரகுராம். சுரேஷ் சங்கையா என்பவர் இயக்கியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்தின் வெற்றிக்கு ரகுராமின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் பெரும்பங்காற்றி இருந்தன.

இதையடுத்து இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், ஏராளமான ஆல்பம் பாடல்களுக்கு ரகுராம் இசையமைத்து வந்தார். பள்ளி பருவத்தில் இருந்தே இவருக்கு அரியவகை நோய் பாதிப்பு இருந்து வந்தது. அதாவது மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்திய amyotrophic lateral sclerosis என்கிற அரியவகை நோய் பாதிப்பு தான் ரகுராமுக்கும் ஏற்பட்டு இருந்தது.

இதையும் படியுங்கள்.... எதுக்குங்க இந்த வேலை..விஷாலுடனான காதல் குறித்து உண்மையை உடைத்த அபிநயா

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

இதற்காக பல வருடங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். குறிப்பாக அவரது மருத்துவ சிகிச்சை செலவு மட்டும் மாதத்திற்கு 10 லட்சம் ஆகுமாம். அவரது தாய் மாமா தான் ரகுராமின் மருத்துவ செலவுகளை எல்லாம் பார்த்து வந்துள்ளார். இவ்வாறு மாதத்திற்கு 10 லட்சம் வீதம் செலவழித்து சிகிச்சை பெற்று வந்த ரகுராமிற்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

33

இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரகுராமிற்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ரகுராமின் இந்த திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் இசையமைத்துள்ள சத்திய சோதனை என்கிற திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்.... சூப்பர் ஸ்டாரை கௌரவிக்கும் கர்நாடக அரசு...ராஜ்யோத்சவா விருது அறிவிப்பு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
Recommended image2
Now Playing
ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!
Recommended image3
Bhanupriya: நடிகை பானுபிரியாவுக்கு என்ன ஆனது? உண்மைகளை போட்டு உடைத்த நடிகை குஷ்பூ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved