விக்ரம் அலப்பறை ஸ்டார்ட்..மாஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ்..
விக்ரம் படத்தின் புதிய போஸ்டருடன் திரையிடும் தேதி மற்றும் நேரத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

vikram movie
கைதி ,மாஸ்டர் வெற்றிகளை தொடர்ந்து பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது கமலை வைத்து இயக்கி உள்ளார். இவர் படங்களில் காவல், சிறை என சாயல் பொதிந்திருந்தது. இதில் மாற்றம் இருக்கலாம் என ரசிர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
vikram movie
கமலுடன் இப்படத்தில் பிக்பாஸ் ஷிவானி (shivani), மகேஷ்வரி, மைனா நந்தினி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
vikram movie
கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான, ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இதில் அனிரூத் இசையமைத்துள்ளார்.
vikram movie
இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சம்பத்ராம், செம்பன் வினோத், டெல்லி கணேஷின் மகன் மகாதேவன், மைம் புகழ் கோகுல்நாத், மெர்சல் பட வில்லன் ஹாரிஸ் பெராடி என 7 வில்லன் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதாம்.
vikram movie
விக்ரம் படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி படப்பிடிப்பு அன்று விக்ரம் படக்குழுவினர் கேக் வெட்டி செலிப்ரேட் செய்த புகைப்படங்கள் வைரலாகின.
vikram movie
முழு பணிகள் முடிவடைவதற்கு முன்னமே வியாபாரமும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளதாம். விக்ரம் படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது.
vikram movie
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டார் நெட்வொர்க் ரூ. 110 கோடிக்கு உரிமையை கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.
vikram movie
ஏற்கனவே விக்ரம் படம் வெளியீட்டு தேதி வரும் மார்ச் 14 காலை 7 மணிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய போஸ்டரை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.