- Home
- Cinema
- அட்ராசக்க... சென்னை முதல் சிங்கப்பூர் வரை... கூலி பட ரிலீசுக்காக போட்டிபோட்டு லீவு விடும் நிறுவனங்கள்
அட்ராசக்க... சென்னை முதல் சிங்கப்பூர் வரை... கூலி பட ரிலீசுக்காக போட்டிபோட்டு லீவு விடும் நிறுவனங்கள்
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் ரிலீஸ் ஆகும் ஆகஸ்ட் 14ந் தேதி ஏராளமான தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

Office Holiday for Coolie Release
லோகேஷ் கனகராஜும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். சுமார் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா, செளபின் சாஹிர், உபேந்திரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவு பணியை கிரீஷ் கங்காதரன் மேற்கொண்டிருக்கிறார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது.
கூலி படத்திற்கு செம டிமாண்ட்
ஜெயிலர் படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின்னர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அதை எகிற வைக்கும் விதமாக படத்தின் பாடல்களும் அமைந்துள்ளன. குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் மோனிகா பாடலுக்கு ரசிகர்கள் வைப் செய்து வருகிறார்கள். கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவும் தொடங்கி படு ஜோராக நடைபெற்று வருகிறது.
கூலி படத்தின் டிக்கெட் புக்கிங்
கூலி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும் அமெரிக்காவில் இப்படம் இதுவரை எந்த தமிழ்படமும் நிகழ்த்தாத சாதனையை படைத்துள்ளது. முன்பதிவு மூலம் மட்டும் 2 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூல் அள்ளி உள்ளனர். அதேபோல் தமிழ்நாட்டிலும் அனைத்து திரையரங்குகளையும் கூலி ஆக்கிரமித்து உள்ளதால், பெரும்பாலான இடங்களில் முதல் நாளைக்கு அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டன. இதனால் இப்படம் முதல் நாளே ரெக்கார்ட் பிரேக்கிங் கலெக்ஷன் அள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கூலி படத்துக்காக விடுமுறை அறிவிப்பு
பொதுவாக ரஜினி நடித்த படங்கள் ரிலீஸ் ஆனால் அதற்காக தென்னிந்தியாவில் சில நிறுவனங்கள் விடுமுறை விடுவதுண்டு. ஆனால் கூலி படத்திற்காக சென்னை மட்டுமின்றி சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலும் சில நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளதோடு, கூலி படத்திற்கான டிக்கெட்டையும் இலவசமாக வழங்கி உள்ளது. அதிலும் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனம், கூலி படத்திற்காக லீவு விட்டு, ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும் வழங்கி இருக்கிறது. இதுதவிர கேரள மாநிலம் கோட்டயத்திலும் ஒரு தனியார் நிறுவனம் கூலி படத்திற்காக ஆகஸ்ட் 14ந் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.