நேரலையில் நிர்வாண போட்டோஸ்..பாப் பாடகிக்கு தடை போட்ட இன்ஸ்டாகிராம்!
பிரபல அமெரிக்க பாப் பாடகி மற்றும் நடிகையான மடோனாவிற்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம் நேரலைக்கு தடை விதித்துள்ளது.

Pop singer Madonna
அமெரிக்க பாப் பாடகி மடோனா மிகவும் பிரபலம். இவர் லைக் எ பிளேயர், ட்ரூ ப்ளூ, மடோனா, மேடம் எக்ஸ் என பல ஹிட் ஆல்பங்களை கொடுத்துள்ளார். பாடலாசிரியர், பாடகி மற்றும் நடிகை என 80களில் இருந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவது நிரூபித்து, ஏகப்பட்ட ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார்.
Pop singer Madonna
பல லட்சம் ரசிகர்களை கொண்ட பாப் பாடகி மாடான, தனது ரசிகர்களை மகிழ்விக்க எப்போதும் தனது ரசிகர்களை மகிழ்விக் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து அல்லோலப்படுத்தி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் தனது மார்பகம் முழுவதுமாக தெரியும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
Pop singer Madonna
அதுமட்டுமல்லாமல் மெத்தையில் படு கவர்ச்சியாக இவர் கொடுத்த போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தாலும் சமூக வலைதளத்தில் விமர்சன தீயை பற்ற வைத்தது. இதையடுத்து புகைப்படத்தை எந்தவிதமான எச்சரிக்கையும் இல்லாமல் இன்ஸ்டாகிராம் நிறுவனம் அகற்றியது.
Pop singer Madonna
இன்ஸ்டாகிராம் நிறுவனம் புகைப்படத்தை அகற்றியதற்கு மடோனா கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால் கவர்ச்சியை கொஞ்சமும் குறைக்கவில்லை. தொடர்ந்து ரசிகர்களிடம் நேரலையில் பேசி வரும் மடோனா படுகவர்ச்சியாக நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டார். இதனால் கடுப்பான இன்ஸ்டாகிராம் நிர்வாகம் அதிரடி காட்டியுள்ளது. அதன்படி நேரலையில் பேச முற்பட்ட மடோனாவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இனி இன்ஸ்டாகிராமில் லைவ் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என இன்ஸ்டாகிராம் நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.