- Home
- Cinema
- விஜய்யிடம் MLA சீட் கேட்ட ‘அந்த’ பேமஸ் டைரக்டர் யார்? ஹிண்ட் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்; டீகோடு செய்த தவெக-வினர்
விஜய்யிடம் MLA சீட் கேட்ட ‘அந்த’ பேமஸ் டைரக்டர் யார்? ஹிண்ட் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்; டீகோடு செய்த தவெக-வினர்
Vijay Refused to give MLA seat : முதல்வர் விஜய், பிரபல தமிழ் பட இயக்குநருக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்க மறுத்ததாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் சட்டப்பேரவையில் கூறினார். அந்த இயக்குநர் யார் என்பதை பார்க்கலாம்.

பிரபல இயக்குநருக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்க மறுத்த விஜய்
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதிலுரை வழங்கினார். அப்போது, நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் குறித்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பகிர்ந்துகொண்ட தகவல் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை சட்டப்பேரவையில் குறிப்பிட்ட புஸ்ஸி ஆனந்த், விஜயின் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரு தொகுதியை கேட்டதாக தெரிவித்தார்.
புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட சீக்ரெட்
இதுகுறித்து பேசியபோது, நீண்ட காலமாக அந்தத் தொகுதியில் கட்சிக்காக பணியாற்றி வரும் மாவட்டச் செயலாளரை புறக்கணித்து வேறு ஒருவருக்கு தொகுதியை வழங்க முடியாது என்பதே விஜயின் நிலைப்பாடாக இருந்ததாக அவர் தெரிவித்தார். “பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கும் மாவட்டச் செயலாளரை விட்டுவிட்டு அந்த தொகுதியை உங்களுக்கு கொடுக்க முடியாது” என்ற வகையில் விஜய் அந்த இயக்குநரிடம் கூறியதாக புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டார்.
வலைவீசி தேடிய நெட்டிசன்கள்
இதன் மூலம், தேர்தல் நேரத்தில் பதவியை விட நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்த அடிமட்டத் தொண்டர்களுக்கு விஜய் முக்கியத்துவம் கொடுப்பார் என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாகவும் அவர் பேசினார். புஸ்ஸி ஆனந்த் இந்த சீக்ரெட்டை சட்டப்பேரவையில் போட்டுடைத்ததும் யார் அந்த டைரக்டர் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வலைவீசி தேடத் தொடங்கினர். ஆனால் சட்டப்பேரவையிலேயே அதற்கான விடை கிடைத்துவிட்டதாக குறிப்பிட்டு, அந்த டைரக்டர் யார் என்பதையும் நெட்டிசன்கள் டீகோடு செய்து வருகின்றனர்.
திமுக-விடம் மன்னிப்பு கேட்ட விஜய்! தவெக அமைச்சர் செய்த தவறு! நடந்தது என்ன?
யார் அந்த இயக்குநர்?
புஸ்ஸி ஆனந்த் அந்த டைரக்டர் பற்றி பேசுகையில், சட்டமன்றத்தில் இருந்த தவெக எம்.எல்.ஏ-வும் வேளான்துறை அமைச்சருமான வினோத், தன் அருகில் இருந்த விக்னேஷை கைகாட்டினார். தற்போது அமைச்சராக உள்ள விக்னேஷ், கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆவார். அந்த கிணத்துக்கடவு தொகுதியை சேர்ந்த இயக்குநர் யாரென்றால், லோகேஷ் கனகராஜ் தான். அவர் தான் விஜய்யிடம் எம்.எல்.ஏ சீட் கேட்டிருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். தன்னை வைத்து மாஸ்டர், லியோ என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷுக்கே விஜய் எம்.எல்.ஏ சீட் கொடுக்காத தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
CM Vijay : முதல்வராக கோட்டையில் கொடியேற்றிய விஜய்... சுதந்திர தின விழாவில் என்ன பேசினார் தளபதி?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

