MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்தால்... 'GOAT' படத்தின் உள்ளே வந்த தளபதி விஜய்! வெங்கட் பிரபு கூறிய தகவல்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்தால்... 'GOAT' படத்தின் உள்ளே வந்த தளபதி விஜய்! வெங்கட் பிரபு கூறிய தகவல்!

இயக்குனர் வெங்கட் பிரபு 'கோட்' படத்தின் கதையை முதலில் யாரை மனதில் வைத்து எழுதினேன் என்பதை கூறியுள்ளார். இதன் மூலம் தளபதி விஜய் இப்படத்தின் உள்ளே வந்ததன் பின்னணியும் தெரியவந்துள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Sep 01 2024, 10:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
GOAT Movie

GOAT Movie

தளபதி விஜய் 'லியோ' படத்தின் ரிலீஸ்க்கு பின்னர், எந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிப்பார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் முதல் முறையாக இணைவதை உறுதி செய்தார். விஜய் நடிப்பில் உருவான படங்களிலேயே அதிகப்படியான வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு, 'தி கிரேட் ஆஃப் ஆல் டைம்' (GOAT) என பெயரிட்டுள்ளனர் படக்குழுவினர்.
 

28
Thalapathy Vijay Goat Release

Thalapathy Vijay Goat Release

செப்டம்பர் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள 'கோட்' படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் மற்றும் டிக்கெட் முன்பதிவு பணிகள் பரபரப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விஜய் தன்னுடைய 68வது படமாக நடித்துள்ள 'கோட்' படத்தில், இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

53 வயது தமிழ் நடிகையை ரூமுக்கு அழைத்தார் மோகன் லால்? கொளுத்தி போட்ட பிரபலம்!

38
Vijay Dual Role in GOAT Movie

Vijay Dual Role in GOAT Movie

அப்பா - மகன் என விஜய் நடித்துள்ளது மட்டுமின்றி, விஜய் 15 வயதில் எப்படி இருப்பார்... 19 வயதில் எப்படி இருப்பார்? என AI தொழில்நுட்பம் மூலம் மூலம் விஜயை வைத்தே இவருடைய சிறு வயது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கி உள்ள இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

48
GOAT Movie Vijay Pairs

GOAT Movie Vijay Pairs

இந்த படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ள நிலையில், மகன் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், வைபவ், பிரேம் ஜி அமரன், லைலா, மைக் மோகன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து இப்படத்தில் நடித்துள்ளது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு வெங்கட் பிரபுவின் ஆஸ்த்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார்.

செருப்பால் அடிச்சா எல்லாம் சரியாகிடுமா? நடிகர் விஷாலை கழுவி ஊற்றிய ராதிகா!

58
What Type of Movie?

What Type of Movie?

'கோட்' படத்திலிருந்து இதுவரை வெளியாகி உள்ள அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, ட்ரெய்லர் வெளியாகி இது இந்த மாதிரியான ஜானரில் எடுக்கப்பட்ட படம்? என்கிற சந்தேகத்தையும் ரசிகர்கள் மனதில் எழ வைத்தது. இதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு... இது எந்த மாதிரியான படம் என்பதை ட்ரைலரிலேயே கூறி விட்டேன். ஆனால் யாராலும் கணிக்க முடியாது. அதுதான் இந்த படத்தில் ஒளிந்துள்ள ரகசியம் என்பது போல் தெரிவித்தார்.
 

68
Goat Audio Launch

Goat Audio Launch

ஆடியோ லாஞ்சே இல்லாமல் நேரடியாக திரையரங்கில் 'கோட்' படம் வெளியாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் சிறு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும், விஜய்யின் எடுத்த முடிவு தான் இது என கூறப்படுவதால்... ரசிகர்கள் தளபதியின் வார்த்தைக்கு கட்டு பட்டு மனதளவில் இதை ஏற்றுக்கொண்டனர்.

அட்ரா சக்க... நடித்து சம்பாதித்த பணத்தில் புது பிஸ்னஸை துவங்கிய மைனா நந்தினி! குவியும் வாழ்த்து!

78
Venkat Prabhu About Goat Movie First Choice Actor

Venkat Prabhu About Goat Movie First Choice Actor

கோட் படத்தின் ரிலீஸை முன்னிட்டு, அடுத்தடுத்து பல பேட்டிகள் கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு... 'கோட்' படத்தின் கதையை முதலில் ரஜினி மற்றும் தனுஷை மனதில் வைத்து தான் எழுதியதாக அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பேசியுள்ள இவர், 'கொரோனா சமயத்தில்தான் இப்படத்தின் ஸ்பார்க் தனக்கு தோன்றியதாகவும், ரஜினி மற்றும் தனுஷை மனதில் வைத்து இப்படத்தை இயக்க திட்டமிட்டு, கதையை எழுதி முடித்தேன் என கூறியுள்ளார்.

88
Dhanush and Rajinikanth

Dhanush and Rajinikanth

இடையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்தால் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிப்பது சாத்தியமற்றது என்பதால், விஜய்யை வைத்து இப்படத்தை இயக்க இயக்குனர் வெங்கட் பிரபு முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு வேலை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் விவாகரத்து நடைபெறாமல் இருந்திருந்தால் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தை வைத்து இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருப்பார் என கூறப்படுகிறது.

கையில் ஆயுதம்... கண்ணில் பயம்! 'கூலி' படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் கேரக்டர் போஸ்டர் வெளியானது!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
யுவன் சங்கர் ராஜா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved