- Home
- Cinema
- தமிழ்நாட்டின் பேவரைட் ஷூட்டிங் ஸ்பாட்; இந்த ஊரில் மட்டும் 1500 படங்கள் எடுக்கப்பட்டுள்ளதா?
தமிழ்நாட்டின் பேவரைட் ஷூட்டிங் ஸ்பாட்; இந்த ஊரில் மட்டும் 1500 படங்கள் எடுக்கப்பட்டுள்ளதா?
சினிமா படப்பிடிப்பு என்றாலே சென்னையில் தான் நடைபெறும் என நினைப்பீர்கள், ஆனால் சென்னையை காட்டிலும் தமிழ்நாட்டில் உள்ள இந்த ஊரில் தான் அதிக படப்பிடிப்பு நடைபெறுமாம்.

Favourite Shooting Spot in Tamilnadu : சினிமா ஷூட்டிங் என்றாலே பெரும்பாலும் சென்னையில் தான் நடைபெறும். அங்கு பல்வேறு ஸ்டூடியோக்கள் உள்ளதால் அங்கு பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பை நடத்துவார்கள். ஏதேனும் கிராமத்து கதையம்சம் கொண்ட படங்கள் எடுத்தால், அனைத்து இயக்குனர்கள் மனதில் முதலில் வரும் ஒரு பெயர் இருக்கும். அந்த ஊர் தான் தமிழ்நாட்டின் மினி கோடம்பாக்கமாக இருந்து வருகிறது. அந்த ஊர் பற்றியும், அங்கு என்னென்ன படங்கள் எடுத்தார்கள் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.
Favourite Shooting Spot in Tamilnadu
தமிழ்நாட்டின் பேவரைட் ஷூட்டிங் ஸ்பாட் எது?
தமிழ்நாட்டின் பேவரைட் ஷூட்டிங் ஸ்பாட்டாக உள்ள அந்த ஊர் வேறெதுவுமில்லை... பொள்ளாச்சி தான். அங்கு மட்டும் 1500க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறதாம். குறிப்பாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் அங்கு படமாக்கப்பட்டு உள்ளதாம். இங்கு தமிழ் படங்கள் மட்டுமல்ல இந்தி மற்றும் மலையாள படங்களும் படமாக்கப்பட்டு இருக்கின்றன. இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக பொள்ளாச்சி உள்ளதால் தான் அங்கு அதிகளவில் சினிமா படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள்... கைவசம் 1500 கோடி பட்ஜெட் படங்கள்; மாஸ் கம்பேக் கொடுக்க ரெடியான மெர்சல் நாயகி சமந்தா!
Films Filmed in Pollachi
பொள்ளாச்சியில் படமாக்கப்பட்ட படங்கள்
தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட்டான பல படங்கள் பொள்ளாச்சியில் தான் படமாக்கப்பட்டன. குறிப்பாக சூர்யவம்சம், நாட்டாமை, பிரெண்ட்ஸ், தூள், பொன்னியின் செல்வன், ஷங்கரி ஐ, விஷால் நடித்த ஆம்பள, வெடி, சுந்தர் சி இயக்கிய வின்னர், மதகஜராஜா, அரண்மனை, விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் போன்ற படங்கள் எல்லாம் பொள்ளாச்சியில் தான் படமாக்கப்பட்டன. பொள்ளாச்சியை ராசியாக கொண்டு அங்கு தவறாமல் படப்பிடிப்பை நடத்தும் சில இயக்குனர்களும் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் சுந்தர் சி. அவர் தன்னுடைய படங்களின் படப்பிடிப்பை தவறாமல் அங்கு நடத்திவிடுவார்.
Shooting Spot in Pollachi
பொள்ளாச்சியில் உள்ள ஷூட்டிங் ஸ்பாட்
இந்தியாவில் Coconut Capital ஆக பொள்ளாச்சி உள்ளது. அங்கு விளையும் இளநீருக்கு இந்தியா முழுவதும் மவுசு உள்ளது. பொள்ளாச்சியில் ஆழியார் அணை, மங்கி அருவி, அமராவது அணை, நல்லமுடி பூஞ்சோலை, அம்பரம்பாளையம், டாப் ஸ்லிப் யானைகள் கேம்ப், திருமூர்த்தி மலை, ஆத்துப்பாறை என எக்கச்சக்கமான ஷூட்டிங் ஸ்பாட் உள்ளன. அங்கு ஏராளமான படங்கள் படமாக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் தமிழ்நாட்டின் பேவரைட் ஷூட்டிங் ஸ்பாட் ஆக பொள்ளாச்சி திகழ்ந்து வருகிறது.
இதையும் படியுங்கள்... அனிருத், ஏ.ஆர்.ரகுமான், யுவன் சாதனைகளை முறியடித்த சாய் அபயங்கர்!