நயன்தாரா, திரிஷாலாம் லிஸ்ட்லயே இல்ல பாஸ்... தேசிய விருது வாங்கிய தமிழ் நடிகைகளின் லிஸ்ட் இதோ
சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற தமிழ் நடிகைகளின் பட்டியலை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
National Award winning tamil actresses
இந்திய சினிமாவில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது தேசிய விருதுகள் தான். இந்த விருது விழா மத்திய அரசால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படும். தமிழ் சினிமாவில் சிறப்பாக நடித்து தேசிய விருது வென்ற நடிகைகளைப் பற்றி பார்க்கலாம்.
Lakshmi, Shoba
தமிழ் சினிமாவில் முதன்முதலில் தேசிய விருது வாங்கிய நடிகை என்றால் அது லெட்சுமி தான். அவர் கடந்த 1976-ம் ஆண்டு வெளிவந்த சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தில் கங்கா என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கினார். இதற்கு அடுத்தபடியாக பசி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஷோபாவுக்கு கடந்த 1976-ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
இதையும் படியுங்கள்... ரஜினி தத்தெடுத்த தந்தை இவர் தான்.. சம்பாதித்த மொத்த பணத்தையும் ஏழைகளுக்கு வழங்கிய உன்னத மனிதர்..
Suhasini, Archana
பின்னர் கே.பாலச்சந்தர் இயக்கிய மாஸ்டர் பீஸ் படமான சிந்து பைரவியில் சிந்து என்கிற கேரக்டரில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை சுஹாசினிக்கு கடந்த 1985-ம் ஆண்டு தேசிய விருது கிடைத்தது. அவர் வென்ற முதல் தேசிய விருது இதுவாகும். இதைத்தொடர்ந்து 1987-ம் ஆண்டு நடிகை அர்ச்சனாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. பாலு மகேந்திரா இயக்கிய வீடு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது.
Priyamani, Saranya Ponvannan
அதன்பின்னர் கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் தமிழ் நடிகைகளுக்கு தேசிய விருது எட்டாக் கனியாக இருந்த நிலையில், நடிகை பிரியாமணி அந்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் படத்துக்காக தேசிய விருது கிடைத்தது. பின்னர் 2010ம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் வீராயி என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்த நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
Aparna Balamurali, Lakshmi Priya
அதைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் சூரரைப் போற்று திரைப்படத்தில் பொம்மியாக திறம்பட நடித்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளி தான் 2020-ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். இதற்கு அடுத்தபடியாக கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தில் நடித்த லட்சுமி பிரியாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... என் இடுப்பில் கை வைத்த சிரஞ்சீவி.. சட்டென என் அம்மா செய்த அந்த செயல் - செட்டில் நடந்ததை ஓப்பனாக சொன்ன அனுராதா!