லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்ட நயன்தாரா... காரணம் என்ன?
லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நீக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Lokesh Kanagaraj, Nayanthara
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்த நயன்தாரா, ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்துவிட்டதால் பான் இந்தியா நடிகையாக மாறிவிட்டார். அவர் கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் அவர் நடிப்பதாக இருந்த படம். இப்படத்தை மேயாத மான், ஆடை, குலுகுலு போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்க உள்ளார்.
Nayanthara, Lawrence
மேலும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்க முதன்முதலில் நயன்தாராவை கமிட் செய்து இருந்தனர். ஆனால் தற்போது வெளியாகி உள்ள லேட்டஸ்ட் தகவல்படி இப்படத்தில் இருந்து நடிகை நயன்தாரா நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் கதையில் கடைசி நேரத்தில் நடந்த மாற்றம் தான் என சொல்லப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Nayanthara
இப்படத்தை முதலில் திரில்லர் ஜானரில் படமாக்க பிளான் போட்டு வைத்திருந்தார்களாம். ஆனால் தற்போது கதை மாற்றப்பட்டு உள்ளதால் அதில் நயன்தாராவுக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்கும் முடிவில் படக்குழு உள்ளதாம். அந்த நடிகைக்கான தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளது.
Lokesh Kanagaraj and Raghava lawrence
தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்கள் பட்டியலில் உள்ள லோகேஷ் கனகராஜ் கைவசம் விஜய்யின் லியோ, ரஜினியின் தலைவர் 171, கார்த்தியின் கைதி 2, சூர்யா உடன் ரோலெக்ஸ், கமலுடன் விக்ரம் 2 என நீண்ட பட்டியலே உள்ளது. இதுதவிர அவர் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தயாரிக்க உள்ள படங்களின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ரோலெக்ஸுக்கு தம்பியா நடிக்க லோகேஷ் கூப்பிடுவதாக சொல்லி காசை புடுங்கிட்டாங்க - பிரபல நடிகரின் மகன் புலம்பல்