MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தியேட்டரில் டிக்கெட் விற்ற நிவேதா பெத்துராஜ் - எல்லாம் இதற்காக தானா... இது நல்ல ஐடியாவா இருக்கே!

தியேட்டரில் டிக்கெட் விற்ற நிவேதா பெத்துராஜ் - எல்லாம் இதற்காக தானா... இது நல்ல ஐடியாவா இருக்கே!

நடிகை நிவேதா பெத்துராஜ் தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்ய வந்ததை அறிந்த ரசிகர்கள், போட்டி போட்டு வந்து டிக்கெட் வாங்கு சென்றுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 21 2023, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். மதுரையை சேர்ந்த இவர் 11 வயதில் குடும்பத்துடன் துபாய்க்கு சென்றுவிட்டார். இதையடுத்து அங்கு படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் நடிக்க முயற்சித்து வந்த இவருக்கு முதன்முதலில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் அட்டக்கத்தி தினேஷுக்கு ஜோடியாக நடித்த நிவேதா, அடுத்தடுத்து ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் சேதுபதி ஜோடியாக சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்தும் பெரியளவில் சோபிக்கவில்லை.

24

இதையடுத்து தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற நிவேதாவுக்கு அங்கு தொட்டதெல்லாம் தங்கமாகவே இருந்தது. மெண்டல் மதிலோ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், அடுத்தடுத்து சித்ரலஹரி, அலவைகுந்தபுரமுலு, ரெட் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் அங்கு ராசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கு தெலுங்கில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... ஜெயிலர் ரிலீசுக்கு தேதி குறிச்சாச்சு...! தீபாவளிக்கு முன்னரே சரவெடியாக ரிலீஸ் ஆக உள்ள ரஜினி படம்

34

அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது தஸ் கா தம்கி என்கிற தெலுங்கு படம் தயாராகி உள்ளது. இப்படத்தை விஸ்வாக் சென் என்பவர் இயக்கியுள்ளதோடு, இப்படத்தில் நிவேதா பெத்துராஜுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். லியோ ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். தம்கி திரைப்படம் வருகிற மார்ச் 22-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது படு ஜோராக நடைபெற்று வருகிறது.

44

அதன் ஒரு பகுதியாக தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்து தம்கி படத்தை புரமோட் செய்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ். நடிகர் விஸ்வாக் சென்னும் உடன் சென்று ஐதராபாத்தில் உள்ள ஏ.எம்.பி சினிமாஸில் டிக்கெட் விற்பனை செய்தார். நடிகை நிவேதா பெத்துராஜ் டிக்கெட் விற்பனை செய்ததை பார்த்த ரசிகர்கள், அங்குவந்து போட்டிபோட்டு டிக்கெட் வாங்கிச் சென்றனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இது நல்ல ஐடியாவே இருக்கே என பாராட்டி வருகின்றனர். ஆனால் இதுபோன்று எத்தனை நடிகைகள் செய்ய சம்மதிப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதையும் படியுங்கள்... எப்ப வேணாலும் ரூமுக்கு வருவோம்.. 15 நாள் அட்ஜஸ்மெண்ட் பண்ணனும்- டீல் பேசிய இயக்குனர்.. டார்டாராக கிழித்த நடிகை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image2
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Recommended image3
மகனுக்காக சொத்தை உதறிய செல்வநாயகி! தனிமையில் வாடும் சத்யா - விறுவிறுப்பான எபிசோட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved