MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜெயிலர் ரிலீசுக்கு தேதி குறிச்சாச்சு...! தீபாவளிக்கு முன்னரே சரவெடியாக ரிலீஸ் ஆக உள்ள ரஜினி படம்

ஜெயிலர் ரிலீசுக்கு தேதி குறிச்சாச்சு...! தீபாவளிக்கு முன்னரே சரவெடியாக ரிலீஸ் ஆக உள்ள ரஜினி படம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வரும் ஜெயிலர் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த மாஸான அப்டேட் கசிந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 21 2023, 01:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

விஜய் டிவியில் பணியாற்றிய நெல்சன் நயன்தாரா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து இவர் இயக்கிய டாக்டர் திரைப்படமும் அதிரி புதிரியான வெற்றியை ருசித்ததோடு ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக் குவித்து சாதனை படைத்தது. இதன்பின் அவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் நடிகர் விஜய்யின் பீஸ்ட். இப்படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை ருசிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நெல்சன், படுதோல்வியை சந்தித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக தோற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பார்த்தது. இதையடுத்து எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்த நெல்சனுக்கு அடுத்ததாக கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள்... எப்ப வேணாலும் ரூமுக்கு வருவோம்.. 15 நாள் அட்ஜஸ்மெண்ட் பண்ணனும்- டீல் பேசிய இயக்குனர்.. டார்டாராக கிழித்த நடிகை

34

ஜெயிலர் படத்தில் ரஜினி உடன் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், நகைச்சுவை நடிகர் யோகிபாபு, நடிகை தமன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. பான் இந்தியா படமாக தயாராகி வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்துவிடும்.

44

இதையடுத்து ஏப்ரல் 14-ந் தேதி இப்படத்தின் டீசரை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழு, தற்போது அதற்கு முன்னதாகவே வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று ஜெயிலர் படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் இணையும் நயன்! லவ் டுடே நாயகனுக்கு ஜோடி லேடி சூப்பர்ஸ்டாரா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Swetha Lakshman : படம் பிடிக்கலைனா நடுரோட்ல மொட்டை அடிச்சுக்கிறேன்: ரசிகர்களிடம் நடிகை ஓபன் சேலஞ்ச்
Recommended image2
OTT Crime Thriller Movies : கிரைம் த்ரில்லர் ரசிகர்களே நோட் பண்ணுங்க... ஜியோஹாட்ஸ்டாரில் இருக்கும் 5 தரமான மலையாள படங்கள்!
Recommended image3
OTT Movie : வீட்டில் போன் அடிக்குது! மறுமுனையில் பேசுவது பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெண்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved