MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் இணையும் நயன்! லவ் டுடே நாயகனுக்கு ஜோடி லேடி சூப்பர்ஸ்டாரா?

விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் இணையும் நயன்! லவ் டுடே நாயகனுக்கு ஜோடி லேடி சூப்பர்ஸ்டாரா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகை நயன்தாராவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Mar 21 2023, 11:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன், அப்படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டதை அடுத்து தற்போது புதிய படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தில் லவ் டுடே என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தில் நாயகனாக நடித்த பிரதீப் ரங்கநாதன் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு எல்.ஐ.சி என பெயரிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

முதலில் இந்தக்கதையில் சிவகார்த்திகேயன் தான் ஹீரோவாக நடிக்க இருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்படம் அறிவிப்போடு நின்றுபோனது. இதையடுத்து தற்போது அதே கதையடி பிரதீப் ரங்கநாதனுக்கு சொல்லி ஓகே வாங்கி உள்ள விக்கி. அப்படத்தை இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... "The Elephant Whisperers" இயக்குனருக்கு ரூ1 கோடி ஊக்கத்தொகை..! மு.க.ஸ்டாலின் கவுரவிப்பு

34

விக்கி - பிரதீப் இணையும் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. தற்போது பிரதீப் ரங்கநாதன் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறதாம். அந்தவகையில், இப்படத்தில் நடிக்க நடிகை நயன்தாராவும் கமிட் ஆகி உள்ளாராம். ஆனால் அவர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை எனவும், படத்தில் அவர் முக்கியமான ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

44

இதுதவிர பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகைக்கான தேர்வும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளாராம். இப்படத்தை ரூ.45 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... திருமணத்துக்கு பின் எகிறும் கிளாமர்.. பிகினி உடையணிந்து கடலில் கவர்ச்சி ரைடு சென்ற ஹன்சிகா - ஹாட் கிளிக்ஸ் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
பிரதீப் ரங்கநாதன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image2
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Recommended image3
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved