ஸ்பெஷல் நாளில்... கையில் மதுவை வைத்துக்கொண்டு நிக்கியை கட்டி அணைத்து... ரொமான்டிக் ஹனி மூன் கொண்டாடும் ஆதி !
நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி ஆகியோர் திருமணம் செய்து கொண்டு தங்களின் 100 ஆவது நாளை, கொண்டாடும் விதமாக பாரிசில் கலக்கலாக ஹனி மூன் கொண்டாடி வரும் புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் ஜிவி பிரகாஷ் நடித்து, கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'டார்லிங்' படத்தில் அழகிய பேயாக நடித்து ரசிகர்கள் மனதை முதல் படத்திலேயே கவர்ந்தவர் நிக்கி கல்ராணி. இதை தொடர்ந்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2, ஹர ஹர மஹாதேவகி, சார்லி சாப்ளின் 2, யாகாவராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
இவர் 'மிருகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வந்த, ஆதியுடன் 'யாகாவாராயினும் நாகாக்க' மற்றும் 'மரகத நாணயம்' ஆகிய படங்களில் நிக்கி கல்யாணி ஜோடியாக நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் தீ பற்றி கொண்டது.
இதை தொடர்ந்து இருவரும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில், சில சமயங்களில்... இருவரும் ஒன்றாக அவுட்டிங் சென்ற போது, மீடியாக்களின் கண்களில் சிக்கி கிசுகிசுவிற்கு ஆளாகினர். ஒருவழியாக இரு வீட்டு பெற்றோரும், இவர்களுடைய காதலுக்கு பச்சை கொடி காட்டவே... இவர்கள் திருமணம் கடந்த மே மாதம் 18 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து, நிக்கி கல்ராணி விலக முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், தற்போது திருமணம் ஆகி 100 நாள் ஆனதை கொண்டாடுவதற்காக இந்த ஜோடி பாரிஸ் சென்றுள்ளது.
அங்க ஓவர் ரொமான்டிசிக்காக ஒரு கையில் மதுவை வைத்து கொண்டு, காதல் மனைவி நிக்கி கல்ராணியை ஆதி கொஞ்சும் ரொமான்டிக் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.