Hotstar -ல் கலக்க வரும் காஜல், தமன்னா, வாணி போஜன்..! சுடசுட வெளியான தகவல்..!
பல மக்களின் மனதை கொள்ளை கொண்ட, ஓடிடி டிஜிட்டல் தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார், ஐபிஎல் கிரிக்கெட், பிக்பாஸ் நிகழ்ச்சி, மற்றும் விஜய் டிவியின் அணைந்து நிகழ்ச்சிகளும் இதில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் இதையே மிஞ்சும் அளவிற்கு, ஹாட் ஸ்டார் அடுத்த தளத்திற்கு சென்றுள்ளது. அதாவது விரைவில் பிரபல நடிகர் நடிகைகள் நடிக்கும் நான்கு வெப் சீரிஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
இது குறித்து, தெரிவிக்கும் நேரடி நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது. டிடி தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் வெங்கட் பிரபு, காஜல் அகர்வால், தமன்னா, வாணி போஜன், நடிகர் ஜெய், நடிகர் சத்யராஜ், நடிகை சீதா, இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் விரைவில் ஹாட் ஸ்டாரின் ஒளிபரப்பாக உள்ள, வெப் சீரியர்களின்... டீசரும் வெளியிடப்பட்டது. இயக்குனர் வெங்கட் பிரபு இதுவரை இயக்கிடாத புதிய ஜானரில், ஹாரர் வெப் சீரிஸை இயக்கி உள்ளார். இதில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார்.
இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிக்கும் ட்ரிப்பிள்ஸ் என்கிற வெப் தொடர் உருவாகியுள்ளது.
நடிகர் சத்யராஜ் மற்றும் சீதா ஒன்று சேர்ந்து "மை பர்பெக்ட் ஹஸ்பன்ட்' என்கிற வெப் தொடரில் நடிக்கிறார்கள்.
நடிகை தமன்னா, நவம்பர் ஸ்டோரி என்கிற வெப் தொடரில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளித்திரையில் நடித்து ரசிகர்களை மிரள செய்த நாயகிகள் தற்போது புதிய டிஜிட்டல் தளத்திற்கு வருகை தந்துள்ளதற்கு இவர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.