கல்யாணம் முடிந்த சில மாதத்திலேயே குட் நியூஸ் சொன்ன பாவனி - அமீர் ஜோடி! வைரலாகும் போட்டோ!
New Beginnings Pavani and Ameer: சீரியல் நடிகை பாவனி மற்றும் அமீர் இருவரும் இந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ரசிகர்களுக்கு குட் நியூஸ் கூறியுள்ளனர்.

பாவனி ரெட்டி:
பாவனி ரெட்டி தெலுங்கு மற்றும் தமிழில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். குறிப்பாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான, ரெட்டை வால் குருவி, மற்றும் சின்னத்தம்பி, சீரியல்களில் நடித்துள்ளார். ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், இவரால் வெள்ளித்திரையில் சோபிக்க முடியாமல் போனது.
பாவனி முதல் கணவர் மரணம்:
பாவனி ரெட்டி தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்து கொண்டிருக்கும் போது, அதில் ஹீரோவாக நடித்து வந்த பிரதீப் என்பவரை காதலித்து 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஒரு சிறிய பிரச்சனை காரணமாக பிரதீப் விளையாட்டாக தற்கொலை செய்வது போல் பாவனியை பயமுறுத்த நினைத்த நிலையில், இது விபரிதமாக முடிந்தது. போதையில் இருந்ததால், அவர் கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து இவர் மீண்டு வருவதற்கே பல மாதங்கள் ஆனது. பின்னர் மீண்டும் சீரியல்களில் கவனம் செலுத்த துவங்கினர்.
பிக்பாஸ் 5 போட்டியில் கலந்து கொண்ட பாவனி:
பாவனிக்கு மற்றோரு வாழ்க்கையை அமைத்து தரவேண்டும் என அவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விரும்பினர். அதன்படி, பாவனி சில மாதங்கள், தன்னுடைய கணவர் பிரதீப்பின் நெருங்கிய நண்பருடன் டேட்டிங் செய்த நிலையில், அது திருமணத்தில் முடியாமல் போனது. இந்த வலியில் இருந்து வெளியே வருவதற்காக பாவனி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பாவனி மீது காதலில் விழுந்த அமீர்:
இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் நடன இயக்குனர் அமீர். பாவனி மீது தனக்கு இருந்த காதலை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் வெளிப்படுத்திய போது, கன்டென்ட் கொடுப்பதற்காக இப்படி செய்கிறார் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அமீர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் தனக்கு அவர் மீது இருந்த காதலை புரிய வைக்க முயற்சி செய்தார். அதன்படி பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து நடனமாடியபோது, அமீரின் காதலுக்கு பாவனி ஓகே சொன்னார்.
அமீர் - பாவனி சொன்ன குட் நியூஸ்:
பின்னர் இவர்களின் காதல், லிவிங் ரிலேஷன் ஷிப்பாக மாறியது. சுமார் மூன்று வருடங்கள் லிவிங்கில் இருந்த இவர்கள், இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவருமே மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், தற்போது பவானி குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளார். அதாவது, பாவனி - அமீர் திருமணம் முடிந்த கையேடு தங்களின் கனவு இல்லத்தை கட்ட துவங்கிய நிலையில், தற்போது இவரவளின் சொந்த வீடு முடிவடையும் தருவாயில் உள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை பாவனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.