இவ்வளவு சீக்கிரம் இதை நான் எதிர்பார்க்கவில்லை..!! வைரலாகும் சமந்தா வெளியிட்ட புகைப்படம்..!!
நடிகை சமந்தா (samantha) இவ்வளவு சீக்கிரம் இதை பார்ப்பேன் என நினைக்கவில்லை என்று, மிகவும் உணர்வு பூர்வமான புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்த தகவல் வைரலாக பேசப்பட்டு வந்தாலும், யார் எதை பேசினாலும் அதை பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல், நண்பர்களுடன் பார்ட்டி, சைக்கிளிங், மற்றும் நாய் குட்டிகளுடன் பொழுதை கழிப்பது என தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்.
ஏற்கனவே ஷாஷா என்கிற நாய் ஒன்றை மிகவும் செல்லமாக வளர்த்து வரும் சமந்தா, இந்த விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியிலும் ஹாஜி என்கிற ஆஷ் நிறம் கொண்ட நாய் குட்டியை வளர்த்து வருவதாக சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்தார்.
அவ்வப்போது, ஹாஜி மற்றும் ஷாஷாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவர் குறித்து, சமந்தா மிகவும் உணர்வு பூர்வமான கருத்தை பதிவு செய்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து இவர் பதிவிட்டுள்ளதாவது ‘இவ்வளவு சீக்கிரம் இதை பார்ப்பேன் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒவ்வொரு நாளும் இந்த நாய் குட்டிகள் தனக்கு எதையாவது கற்றுக் கொடுத்து வருகின்றன என்றும் பிற நாய்களுடன் சேராத ஷாஷா, இவ்வளவு சீக்கிரத்தில் சக நாயை சகோதரனாக ஏற்றுக் கொண்டதே எனக்கு கிடைத்த ஆசிர்வாதம் என்றும் தெரிவித்துள்ளார். இரண்டு நாய்களும் ஒன்றாக படுத்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.