MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜே சித்து மீது வன்மத்தை கொட்டும் நெட்டிசன்கள் - காரணம் இதுதானா?

விஜே சித்து மீது வன்மத்தை கொட்டும் நெட்டிசன்கள் - காரணம் இதுதானா?

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற யூடியூப்பராக இருப்பவர் விஜே சித்து, இவரின் சமீபத்திய வீடியோ கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருவதன் பின்னணியை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 09 2025, 01:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
எல்லை மீறிய விஜே சித்து

எல்லை மீறிய விஜே சித்து

தமிழ்நாட்டில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த யூடியூபர்களில் விஜே சித்துவும் ஒருவர். முதலில் பிராங் ஷோ மூலம் பிரபலமான இவர், பின்னர் விஜே சித்து விலாக்ஸ் என்கிற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலுக்கு 40 லட்சத்துக்கு அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இந்த சேனலில் டிராவல் விலாக்ஸ் மற்றும் உணவு வீடியோக்கள் பதிவிடுவது வழக்கம். இவரது வீடியோ வெளியானாலே ஒரே நாளில் அசால்டாக மில்லியன் கணக்கான பார்வைகளை தொட்டுவிடும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ஒரே வீடியோவால் பெயைக் கெடுத்துக் கொண்ட விஜே சித்து

ஒரே வீடியோவால் பெயைக் கெடுத்துக் கொண்ட விஜே சித்து

அந்த ஒரு விஷயமே விஜே சித்துவுக்கு தற்போது தலைவலியாக மாறி இருக்கிறது. கடந்த பிப்ரவரி 7ந் தேதி விஜே சித்து மதியம் 3 மணியளவில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவின் இறுதியில் தன்னுடைய டீம் உடன் கடைசியில் ஒரு கேம் ஒன்றை விளையாடி, அதில் தன்னுடன் விளையாடிய ஒருவர் தோற்ற பின்னர் அவரை கீழே தள்ளிவிட்டு, அடித்து மிதித்து பதிவிட்டிருந்தார். காமெடிக்காக செய்வதாக நினைத்து சற்று எல்லைமீறி சென்றிருந்தார் விஜே சித்து. அவரின் இந்த செயலை பார்த்த நெட்டிசன்கள் கொதித்துப்போய் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... நடிகையுடன் ஓடிப்போய் காதல் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி சீரியல் நடிகர்!

34
விஜே சித்து மீது இவ்வளவு வன்மமா?

விஜே சித்து மீது இவ்வளவு வன்மமா?

நெகடிவ் கமெண்ட் அதிகம் வந்ததும் அந்த வீடியோவை ட்ரிம் செய்துவிட்டாலும் அதை நெட்டிசன்கள் எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர் செய்து விஜே சித்துவை கடிந்துகொண்டிருக்கிறார்கள். அதிகம் கொண்டாடப்படும் யூடியூப்பராக இருந்து வந்த விஜே சித்துவுக்கு இவ்வளவு ஹேட்டர்ஸா என ஷாக் ஆகும் அளவுக்கு இந்த ஒற்றை வீடியோவை வைரலாக்கி அவரை சோசியல் மீடியாவில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

44
விஜே சித்துவுக்கு குவியும் கண்டனம்

விஜே சித்துவுக்கு குவியும் கண்டனம்

என்ன தான் விளையாட்டாக இருந்தாலும் ஒருவரை இப்படியா கீழே தள்ளி மிதிப்பது. இவர் சேனல் தொடங்கியதில் இருந்தே இதுபோன்ற செயல்களை செய்து வருகிறார். தற்போதாவது அது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறதே என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் விஜே சித்துவுக்கு எதிராக பதிவுகளை போட்ட வண்ணம் உள்ளனர். சிலரோ அவரது இந்த செயலால் இனி அவர் சேனலை அன் சப்ஸ்கிரைப் செய்வதாக கூறி வருகின்றனர். இதனால் விஜே சித்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டு அவர் வீடியோ வெளியிடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் ஜாக்குலின் பிறந்தநாள்; தடபுடலாக கொண்டாடிய கோவா கேங்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved