Nazriya Nazim Fahadh : கணவருடன் கண்கவரும் நஸ்ரியா நசீம்..க்யூட் போட்டோஸ் இதோ
நஸ்ரியா மற்றும் பகத் பாசில் சமீபத்தில் ஒரு மேடை ஒன்றில் தோன்றியிருந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Nazriya Nazim Fahadh
தென்னிந்திய சினிமாவுலகள் நட்சத்திர தம்பதிகளாக உலா வருபவர்கள் நஸ்ரியா நஜிம் மற்றும் பகத் பாஸில். திருமண நாளை சமீபத்தில் தான் இந்த ஜோடி கொண்டாடியிருந்தது.
அட்லீ இயக்கத்தில் வெளியாகி இருந்த ராஜா ராணி படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நஸ்ரியா ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தார்.
Nazriya Nazim Fahadh
முன்னதாக நிவின் பாலி நடிப்பில் வெளியாகியிருந்த நேரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகியிருந்தது.
மேலும் செய்திகளுக்கு...நாயகிகள் ரேஞ்சுக்கு கர்ப்பகால புகைப்படம் எடுத்த சீரியல் நடிகை அபிநவ்யா
Nazriya Nazim Fahadh
பின்னர் ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் மட்டுமே தோன்றியிருந்தார் நஸ்ரியா.
Nazriya Nazim Fahadh
அதோடு மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் நஸ்ரியா. பின்னர் மலையாளத்தில் சூப்பர் ஹீரோவாக இருக்கும் பகத் பாசிலை காதலித்து கரம் பிடித்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகியிருந்த விக்ரம் படத்தில் வேற லெவலில் தனது பர்பாமை செய்திருந்தார் பகத்.
மேலும் செய்திகளுக்கு...நாயகிகள் ரேஞ்சுக்கு கர்ப்பகால புகைப்படம் எடுத்த சீரியல் நடிகை அபிநவ்யா
Nazriya Nazim Fahadh
அதோடு மலையாளத்தில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வருகிறார். தற்போது மாமன்னன் படத்திலும் முக்கிய ரோலில், புஷ்பா படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
சமீபத்தில் திருமண கொண்டாட்ட விடையோவை வெளியிட்டு இருந்த நஸ்ரியா, இன்னொரு வருடம் பைத்தியக்காரத்தனம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட இந்த நேரத்தில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என குறிப்பிட்டிருந்தார்.
Nazriya Nazim Fahadh
இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது. அதோடு பகத்தின் நாற்பதாவது பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் பகிரப்பட்டது.
Nazriya Nazim Fahadh
ஆனால் அந்த புகைப்படத்தில் பகத் பாஸில் மிகவும் மெலிந்த தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் என்னாச்சு என கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் நஸ்ரியா மற்றும் பகத் பாசில் சமீபத்தில் ஒரு மேடை ஒன்றில் தோன்றியிருந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.