பஞ்சாப்பில் கால் பதிக்கும் நயன்தாரா - விக்னேஷ்சிவன்.. இது ஆண்டவன் கட்டளை...
நயன்தாரா & விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தை குஜராத்தி மொழியில் ரீமேக் செய்ய உள்ளனர்..

Vignesh Shivan _ Nayanthara
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் காதலில் விழ காரணமாக அமைந்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக விக்னேஷ் சிவன் (Vignesh shivan) தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார்
Vignesh Shivan _ Nayanthara
இந்நிறுவனம் மூலம் நெற்றிக்கண், கூழாங்கல் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகின்றனர்.
Vignesh Shivan _ Nayanthara
அடுத்ததாக இந்நிறுவனம், தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது
Vignesh Shivan _ Nayanthara
இப்படத்தில் விஜய் சேதுபதி (vijay sethupathi) ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார்.
Vignesh Shivan _ Nayanthara
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் காத்துவாக்குல ரெண்டு காதல் (kaathuvaakula rendu kaadhal) படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
Vignesh Shivan _ Nayanthara
காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது...இந்நிலையில் பிற மொழி தயாரிப்பு குறித்து விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்...
Vignesh Shivan _ Nayanthara
நயன்தாரா & விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தை குஜராத்தி மொழியில் ரீமேக் செய்ய உள்ளனர்.. அதிகாரப்பூர்வ ரீமேக்கான ‘சுப் யாத்ரா’ மூலம் குஜராத்தி சினிமாவில் தங்கள் தயாரிப்பில் அறிமுகமாகியுள்ளனர்.
Vignesh Shivan _ Nayanthara
குஜராத்தி மொழியில் தயாராகும் இந்த படத்தில் மல்ஹார் தாகர் & கஜ்ஜர்மோனல் முக்கிய வேடத்தில் நடிக்க, தேசிய விருது பெற்ற Manish Saini இயக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.