லக்ஸூரி பொருட்களை வாங்கி குவித்திருக்கும் நயன்தாரா! வாயடைத்து போகவைக்கும் தகவல்!
Nayanthara Stunning Luxury Purchases Revealed: அதிக சம்பளம் பெரும் பிரபலமாக இருக்கும் நயன்தாரா, தனக்காக பல லக்ஸூரி பொருட்களை வாங்கி குவித்துள்ளார். இதுபற்றி இந்த தொகுப்பில் காண்போம்.

லக்ஷுரியை விரும்பும் நயன்தாரா:
தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாரா, தனது நடிப்புக்கு இணையாக வாழ்க்கை தரத்தாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளார். பார்ப்பதற்கு எளிமையாகத் தோன்றும் நயன், தனிப்பட்ட வாழ்க்கையில் லக்ஷுரியை விரும்பும் பிரபலமாகவே உள்ளார். அவரிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்கள், வீடுகள் மற்றும் அவர் பயன்படுத்தும் பிராண்டுகள் பற்றி அடிக்கடி ரசிகர்கள் வட்டாரத்தில் விவாதம் எழுவதும் வழக்கமாகி வருகிறது.
3 இடங்களில் வீடு:
சரி நயன்தாராவின் லக்ஸூரி வாழ்க்கை குறித்து பார்ப்போம். நயன்தாராவுக்கு சென்னை, ஹைதராபாத் மற்றும் கேரளாவில் பல கோடி மதிப்புள்ள வீடுகள் உள்ளன. வேலை காரணமாக சொந்த ஊரான கேரளாவை விட, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அதிக நேரம் செலவிடுவதால், அங்கு உயர்நிலை அபார்ட்மென்ட்கள் மற்றும் வில்லாக்கள் வாங்கி வைத்துள்ளார்.
கவனம் ஈர்க்கும் போயஸ் கார்டன் வீடு:
சென்னையில் போயஸ் கார்டன் மற்றும் ஆழ்வார்பேட்டை போன்ற இடங்களில் இவருக்கு வீடுகள் உள்ளது. குறிப்பாக போயஸ் கார்டன் வீட்டின் உள்கட்டமைப்பு ரசிகர்களின் அதிக கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. கேரளாவில் இவர் வாங்கி உள்ள வில்லா, இயற்கை சூழலை மையமாகக் கொண்ட அமைதியான இடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
நயன்தாராவின் கார்கள்:
நயன்தாரா பயன்படுத்தும் கார்கள் பெரும்பாலும் லக்ஸூரி செக்மெண்ட் உள்ளே வந்துவிடுகிறது. காரணம் BMW 7 Series, Mercedes-Benz GLS, Audi Q7 போன்ற உயர் ரக கார்களையே அவர் பயன்படுத்துகிறார். சில நேரங்களில் Range Rover அல்லது ஸ்போர்ட்ஸ் கார்களில் அவர் பயணம் செய்யும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இவர் பயன்படுத்தும் கார்கள் அனைத்துமே சில கோடிகள் மதிப்பு கொண்டவை.
நகைகள் மீது அலாதி பிரியம்:
நயன்தாராவுக்கு நகைகள் மீதும் அலாதி பிரியம். வைரம், பிளாட்டினம், தங்கம் போன்றவற்றில் மிகவும் வித்தியாசமானகலெக்ஷன்களை வைத்துள்ளார். ரெட் கார்பெட் நிகழ்ச்சி மற்றும், போட்டோ ஷூட்களில் இவர் அணியும் நகைகள் ரசிகர்களையே வியர்ந்து பார்க்க வைக்கும். குறிப்பாக திருமணத்தில் அவர் அணிந்த பாரம்பரிய நகைகள், ரசிகர்கள் மத்தியில் பல நாட்கள் பேசப்பட்டன. அந்த நகைகளின் விலை கோடிகளை எட்டும் என திரைப்பட வட்டாரத்தில் கூறப்பட்டது.
உலக தரம்வாய்ந்த பொருட்கள்:
நயன்தாராவின் ஃபேஷன் தேர்வுகளும் உயர் ரக தேர்வாகவே உள்ளன. Gucci, Dior, Louis Vuitton, Chanel மற்றும் Hermès போன்ற உலக அளவில் பிரபல பிராண்டுகளின் ஹேண்ட்பேக்குகள் மற்றும் உடைகளை அவர் அடிக்கடி பயன்படுத்துகிறார். இந்தப் பிராண்டுகளின் சில கை பையின் விலை 3 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வரை இருக்கும். நயன்தாரா ஏர்போர்டில் தோன்றும் போது கூட இவர்களின் உடைகள் மற்றும் ஹாண்ட் பேக் போன்றவை தனித்தன்மை கொண்டதாக இருக்கும்.
வீட்டில் ஹை டெக் சாதனங்கள்:
அதே வீட்டில் அவர் பயன்படுத்தும் டெக் சாதனங்கள் அனைத்தும் உயர்ந்த தரத்தில் இருக்கும். குறிப்பாக iPhone Pro Max, iPad Pro, Apple MacBook போன்ற பொருட்கள் அவர் கைவசம் இருப்பது சாதாரணமுதான். வீட்டின் இன்டீரியர் ஸ்மார்ட் ஹோம் வசதிகளுடன் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஃபர்னிச்சர்கள், உயர்தர ஹோம் டெக்கார் ஆகியவை அவரது வீட்டை மேலும் அழகாக்குகின்றன.
ரௌடி பிச்சர்ஸ்:
அதே போல் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான Rowdy Pictures மூலமும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பல கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இது அவர்களின் லக்ஷுரி வாழ்க்கையின் வணிக ரீதியான ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. திரையுலகில் முன்னணி நடிகை என்ற முறையில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட ரீதியிலும் லக்ஸூரி வாழ்க்கை வாழ்ந்து வரும் நட்சத்திரமாக நயன்தாரா உள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.