நயன்தாராவின் 'கனெக்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியானது..!
நடிகை நயன்தாரா நடித்து முடித்துள்ள, 'கனெக்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு பின்பும், கோலிவுட் திரையுலகில் மவுசு குறையாத நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா, தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும்... கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களையும் மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான, O2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதைத்தொடர்ந்து நயன்தாரா மற்றொரு படத்தின் ரிலீஸுக்கு தயாராகியுள்ளார்.
ஏற்கனவே நடிகை நயன்தாராவை வைத்து 'மாயா' படத்தை இயக்கி, சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்த இயக்குனர் அஸ்வின் சரவணன், மீண்டும் நயன்தாராவை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'கனெக்ட்'. இந்த படத்தில், நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் வினய் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் போன்ற பலர் நடித்துள்ளனர்.
Varisu Trailer Release: 'வாரிசு' படத்தின் ட்ரைலர் ரிலீஸ் எப்போது..? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!
இந்த படத்தை நயன்தாராவின் கணவரும்,இயக்குனருமான விக்னேஷ் சிவன், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஹாரர் மற்றும் திரில்லர் கதை அம்சத்தில் உருவாகி உள்ள படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தற்போது 'கன்னெட்' படத்தின், சென்றார் சான்றிதழ் மாற்று ரன்னிங் டைம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும், 99 நிமிடங்கள் இடைவேளை இல்லாமல் ஓடக்கூடிய படமாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் புதிய முயற்சியாக ஒரு மணிநேரத்துக்கும் குறைவாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் எப்படிப்பட்ட வரவேற்பை கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.