MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Nayanthara new movie : ஓடிடி-யில் ஹாட்ரிக் அடிக்க தயாராகும் நயன்தாரா.... சைலன்டாக நடக்கும் டீல்

Nayanthara new movie : ஓடிடி-யில் ஹாட்ரிக் அடிக்க தயாராகும் நயன்தாரா.... சைலன்டாக நடக்கும் டீல்

நடிகை நயன்தாரா (Nayanthara) நடித்த மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அவர் நடித்துள்ள படமும் அவ்வாறே வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Dec 20 2021, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா (Nayanthara). இவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். 

27

அண்மையில் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். அங்கு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

37

இவர் கைவசம் தமிழில், விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, அஸ்வின் சரவணன் இயக்கும் ‘கனெக்ட்’, மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் ‘கோல்டு’, தெலுங்கில் மோகன்ராஜா இயக்கும் ‘காட்ஃபாதர்’ போன்ற படங்கள் உள்ளன.

47

இதுதவிர இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் என்பவர் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா (Nayanthara). 

57

இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

67

இப்படத்திற்கு ஆக்சிஜன் (Oxygen)என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முன்னணி ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறதாம்.

77

ஏற்கனவே நடிகை நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்ட நிலையில், விரைவில் ஆக்சிஜன் (Oxygen) படமும் அந்த லிஸ்டில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
நடிகர் அக்ஷய் குமாரின் 13 வயது மகளிடம் நிர்வாண போட்டோ கேட்ட நபர் - பின் நடந்த விபரீதம்!
Recommended image2
தங்கமயில் ரகசியம் முதல் அம்மாச்சியைத் துரத்திய கதிர் வரை: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்தடுத்து அரங்கேறிய திருப்பங்கள்!
Recommended image3
Now Playing
'பிகில்' படத்துல 6 மாசம் நடிச்சும்... சம்பளம் இவ்ளோதானா? உண்மையை உடைத்த இந்திரஜா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved