நடிகை நயன்தாராவின் தந்தை திடீர் என மருத்துவமனையில் அனுமதி!
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் தந்தை தற்போது உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் நயன்தாரா ராசரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாரா... அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நடிகை. தற்போது 'அண்ணதா', 'நெற்றிக்கண்' போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' மற்றும் மூன்று படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா, கொச்சிக்கு சென்ற போது... அவரது தந்தை உடல் நலம் முடியாமல் உள்ளதால் விரைவில் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளக்கூறி வர்பூர்தியதாக செய்திகள் வெளியானது.
நயன்தாராவும் தன்னுடைய தந்தையின் ஆசை படி விரைவில் திருமணத்திற்கு ஓகே கூறிவிட்டதாகவும் எனவே இந்த வருடத்திலேயே நயன்தாரா திருமணம் நடைபெறலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது, நயன்தாராவின் தந்தை குரியன் உடல்நல குறைவு காரணமாக, கோடியட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாராவின் தந்தை விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர், தற்போது மனைவி ஓமனா குரியனுடன் கேரள மாநிலம், கொச்சியில் சொகுசு வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாகவே இவர் உடல்நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே உடனடியாக கேரளாவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது நயன்தாராவின் தந்தை குரியன் நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.