கொளுந்துவிட்டு எறிந்த தடுப்பூசி சர்ச்சை..! புதிய புகைப்படத்தால் ஃபுல் ஸ்டாப் வைத்த நயன்தாரா தரப்பு..!
நடிகை நயன்தாரா கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி நேற்று போட்டு கொண்டதன், புகைப்படத்தை வெளியிட்டிருந்த நிலையில் அவர் ஊசி போட்டு கொண்டது போல் தெரியவில்லை என, நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் தற்போது டாப் காதல் ஜோடியாக வலம் நயன்தாராவும் - விக்னேஷ் எங்கு சென்றாலும் ஜோடியாக தான் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இருவருவரையும் தனித்தனியே பார்ப்பது மிகவும் அரிது.
அந்த வகையில் நேற்றைய தினம், நயன்தாரா மற்றும், விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு ஜோடியாக சென்று கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போட்டு கொண்டனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டபோது இருவரும் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகிய நிலையில், நயன்தாரா ஊசி போட்டுக்கொண்ட போட்டு நர்ஸ் விரல்களை வைத்து மறைத்திருந்ததால், உண்மையில் அவர் தடுப்பூசி போட்டு கொண்டாரா? என்கிற சந்தேக கேள்விகளை நெட்டிசன்கள் பலர் எழுப்பி வந்தனர்.
இதற்க்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில், நயன்தாரா புதிய புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்றும், நயன் - விக்கி ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் நயன்தாரா தரப்பு கையில் ஊசி போடுவது, லேசாக தெரியும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். ஒருவேளை இப்படி ஒரு சர்ச்சை எழும் என்று நினைத்திருந்தால் நயன்தாரா இன்னும் தெளிவாக எடுத்திருப்பார்.