பிரபல நடிகருடன் கடற்கரையில் நிற்கும் நயன்தாரா! விக்னேஷ் சிவன் எங்கே..? வைரலாகும் புகைப்படம்.!
நடிகை நயன்தாரா, பிரபல நடிகருடன் கடற்கரையில் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று, தற்போது வைரலாகி வருகிறது.
கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலங்களில் கூட, தனி விமானம் மூலம் கொச்சின் சென்று ஓணம் கொண்டாடினார் நயன்தார.
அதே போல் மீண்டும் தனி விமானம் மூலம் கோவா சென்று காதலர் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் மற்றும் தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளையும் விமர்சியாக கொண்டாடி மகிழ்ந்தார்.
தனி விமானம் மூலமே காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னைக்கும் வந்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் மத்திய மாநில அரசுகள் கொடுத்த அனுமதியின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
நீண்ட ஓய்வுக்கு பின்னர், நயன்தாரா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு தன்னுடைய நடிப்பு பணியை துவங்கியுள்ளார்.
மலையாள படமொன்றில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்றும், பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் அவர்களுடன் 12 வருடங்களுக்கு பின்னர் நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொச்சியில் ஆரம்பமானது.
இதில் நயன்தாரா கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா கடற்கரை அருகில் நின்று கொண்டிருப்பது போலவும் அருகில் படக்குழுவினர் நிற்பது போலவும் அந்த புகைப்படத்தில் உள்ளது.
நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனும் அவர் இயக்க உள்ள காத்து வாக்குல இரண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் பிசியாகி உள்ளார் என கூறப்படுகிறது.