- Home
- Cinema
- 'அறம் செய்யும் அறம் நாயகி'.... ஏழை எளிய மக்கள் 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்து ஏற்பாடு செய்த நயன்தாரா
'அறம் செய்யும் அறம் நாயகி'.... ஏழை எளிய மக்கள் 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்து ஏற்பாடு செய்த நயன்தாரா
Nayanthara Vignesh Shivan wedding : திருமணத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு கல்யாண விருந்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார் நயன்தாரா.

கோலிவுட்டில் கொண்டாடப்பட்ட குறிப்பிடத்தக்க காதல் ஜோடிகளில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியும் அடங்குவர். பேச்சுவாக்கில் மலர்ந்த இவர்களது காதல் காத்துவாக்குல வளர்ந்து இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளது. இன்று காலை 8:30 மணியளவில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமணம் நடைபெற்றது.
தென்னிந்திய திரையுலகின் முக்கியமான நடிகை என்பதால் நடிகை நயன் தாராவின் திருமணத்திற்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதுதவிர சமூக வலைதளங்களிலும் திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
திருமண நாளில் பிசியான வேலையிலும் நடிகை நயன்தாரா சமூக அக்கறையுடன் செய்துள்ள ஒரு செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அது என்னவெனில், நடிகை நயன்தாரா, தனது திருமணத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு கல்யாண விருந்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி இன்று மதியம் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் ஏழை எளிய மக்களுக்கு கல்யாண விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... பாலிவுட் முதல் கோலிவுட் வரை... லேடி சூப்பர்ஸ்டாரை நேரில் வாழ்த்த படையெடுக்கும் பிரபலங்கள் - முழு லிஸ்ட் இதோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.