நயன்தாராவுடன் நெருக்கமாக படு ரொமான்ஸ் பண்ணும் விக்கி..! சமூக வலைத்தளத்தை தெறிக்க விடும் வைரல் போட்டோ!
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் படு ரொமான்ஸ் செய்த கியூட் புகைப்படம், ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார்.
பூவுடன் சேர்ந்து நாறும் மணக்கும் என்கிற பழமொழிக்கு ஏற்ப, நயன்தாராவை காதலிப்பதால் விக்னேஷ் சிவன் இயக்குனர் என்பதை தாண்டி, நயன்தாராவின் காதலர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளார்.
'நானும் ரவுடி தான்' படத்தில் பற்றி கொண்ட இவர்களது காதல் தீ, கடந்த 5 வருடங்களாக கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
ஒட்டுமொத்த திரையுலகமே கண் வைக்கும் அளவிற்கு காதலித்து வருகிறார்கள்.
படப்பிடிப்பு முதல் ஃபாரின் டூர் வரை விக்கி இல்லாமல் நயன் எங்குமே நகர்வது கிடையாது. காதலியுடன் ஜாலியாக ஊர் சுற்றும் விக்கி அந்த போட்டோக்களை வேறு அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து முரட்டு சிங்கிள்ஸை கடுப்பேற்றி வருகிறார்.
அந்த வகையில் சற்று முன்னர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் நெருக்கமாக உள்ள ரொமான்ஸ் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படம் வெளியான ஒரு சில மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்து உள்ளது என்பதும் இந்த புகைப்படத்திற்கு பல சுவராசியமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.
தற்போது நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.