நயன்தாராவை மனதில் வைத்து இப்படி ஒரு டைட்டில்லா..? ஸ்வீட் தலைப்பை வெளியிட்ட ரவுடி பிச்சர்ஸ்..!
நயன்தாரா - விக்கி இணைந்து தயாரிக்க உள்ள அடுத்த படத்தில் செம்ம ஸ்வீட் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. நயன்தாராவை மனதில் வைத்து தான் இப்படி ஒரு டைட்டில் உருவானதா? என ரசிகர்கள் மனதிலும் கண்டிப்பாக கேள்வி எழுப்பும் அளவிற்கு டைட்டில் வைத்துள்ளனர்.
தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார்.
நடிப்பு மட்டும் இன்றி, சமீப காலமாக தயாரிப்பாளராகவும் உருவெடுத்து... காதலன் விக்கியுடன் இணைத்து 'ரவுடி பிச்சர்ஸ்' மூலம் சில படங்களை தயாரித்து வெற்றி நடை போட்டு வருகிறார்.
இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் தயாராகி வருகிறது.
அதனை தொடர்ந்து ராக்கி மற்றும் கூழாங்கல் ஆகிய திரைப்படங்களின் உரிமையையும் கைப்பற்றி உள்ளது.
அது மட்டுமின்றி விக்னேஷ் சிவன் இயக்கி விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினையும் ரவுடி பிச்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறார்.
இதை தொடர்ந்து இந்த நிறுவனம் தயாரிக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியள்ளது. அறிமுக இயக்குனர் விநாயக் என்பவர் இயக்க உள்ள இந்த படத்தின் நடிகர் - நடிகைகள் குறித்த எவ்வித அறிவிப்பும் தற்போது வெளியாகவில்லை.
இந்த படத்திற்கு'வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்' என்று டைட்டில் வைத்துள்ளனர்.
நயந்த்ராவை மனதில் வைத்து தான் இப்படி ஒரு இனிப்பான பெயர் வைக்கப்பட்டுள்ளதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.