கமலின் செயலால் கண்ணீர் விட்டு அழுதேன்; நவாசுதீன் சித்திக் சொன்ன 'ஹே ராம்' சீக்ரெட்
'ஹே ராம்' படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் பேட்டி ஒன்றில் மனம்விட்டு பேசி இருக்கிறார்.

கமல்ஹாசனின் ஹே ராம்
கமல்ஹாசன் இயக்கிய 'ஹே ராம்' படம் இன்னிக்கும் ஒரு கிளாசிக் படமா பேசப்படுது. கமலே கதை எழுதி, இயக்கி, தயாரிச்ச இந்தப் படம் 2000-ம் வருஷம் வெளியானது. ஷாருக்கான் கூட இந்தப் படத்துல முக்கியமான ரோல் பண்ணிருந்தாரு. ஹே ராம் படத்தைச் சுத்தி நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு. அதில் ஒண்ணு நவாஸுதீன் சித்திக்கை பற்றியது. இன்றைக்கு இந்தியாவில் டாப் நடிகர்களில் ஒருத்தராக இருக்கும் நவாஸ், அப்போ கமல்ஹாசன்கிட்ட 'ஹே ராம்' படத்துல உதவி இயக்குநரா வேலை பார்த்துக்கிட்டே, ஒரு சின்ன ரோல் நடிச்சிருந்தாராம்.
ஹே ராம் படத்தில் நடித்த நவாஸுதீன் சித்திக்
இதுபற்றி, கபில் ஷர்மா ஷோவில் நவாஸுதின் சித்திக், 'ஹே ராம்' படத்துல நடித்த சம்பவத்தை சொல்லியிருக்கிறார். அதில் அவர் கூறுகையில், “அது உண்மையிலேயே ஒரு முக்கியமான ரோல். கமல் சார் கேரக்டரைக் காப்பாத்துற ஒருத்தரோட ரோல் அது. என்னோட ஃபேவரிட் நடிகரோட சேர்ந்து நடிக்கற சான்ஸ் கிடைச்சதுனால ரொம்ப சந்தோஷமா இருந்தேன். படத்தின் பிரீமியர் வந்தப்போ, பெரிய திரையில என்னைப் பார்க்கணும்னு ஆசையில, எல்லா ஃப்ரெண்ட்ஸையும் கூட்டிட்டுப் போயிருந்தாராம் நவாஸ்.
இதையும் படியுங்கள்... சுதந்திர தினத்தில் Youtubeல் வெளியான ஹே ராம்.. "படைத்த புதிய சாதனை" - இத்தனை ஆண்டுகள் கழித்தும் மவுசு குறையவில்லை!
ஹே ராம் பட காட்சிகளை நீக்கிய கமல்
ஆனா, கடைசி நேரத்துல நவாஸோட சீனை கட் பண்ணிட்டாங்க. பிரீமியர்லயே கமலே வந்து இதை நவாஸ்கிட்ட சொல்லியிருக்காரு. நவாஸ் நிறைய ஃப்ரெண்ட்ஸ கூட்டிட்டு வந்ததைப் பார்த்துட்டு, கமல் அவர்கிட்ட வந்து, “உங்க ஃப்ரெண்ட்ஸ்கிட்ட உங்க சீன் கட் பண்ணிட்டதா சொல்லிடுங்க”ன்னு சொல்லியிருக்காரு. அப்போ நவாஸ், “இந்த சீனை எப்படியாவது படத்துல சேர்க்க முடியுமானு” கேட்டிருக்காரு. ஆனா, அடுத்த நாளே படம் ரிலீஸ். அதனால் வாய்ப்பே இல்ல என சொல்லிவிட்டாராம் கமல்.
கண்ணீர்விட்டு அழுத நவாஸுதீன் சித்திக்
இதைக் கேட்டதும் தனக்கு அழுகையே வந்துடுச்சுன்னு நவாஸ் அந்த நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார். அப்போ கமலோட பொண்ணு ஸ்ருதி ஹாசன் வந்து நவாஸை சமாதானப்படுத்தினாங்களாம். கொஞ்ச வருஷம் கழிச்சு, கமலே நவாஸ் 'ஹே ராம்' படத்துல நடிச்சதைப் பத்திப் பெருமையா சொல்லியிருந்தார். அதைப்பார்க்கும் போது சந்தோஷமாக இருந்ததாக நவாஸுதீன் சித்திக் கூறி இருக்கிறார். பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவர் தமிழில் ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கமல் ஹாசன் சொன்னா முகத்தை கழுவித்தான் ஆகணும்; ராணி முகர்ஜி சொன்ன மேக்கப் ஸ்டோரி!