நானி நடித்த ஹிட் 3 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வந்தாச்சு!
சைலேஷ் கொலனு இயக்கத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகி ஹிட்டான ஹிட் 3 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அப்டேட் கசிந்துள்ளது.

Hit 3 Movie OTT Release Date
நானி நடித்த புதிய படம் ஹிட் 3. மே 1 அன்று உலகளவில் வெளியான இந்தப் படம் தற்போது ஓடிடி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. முதல் வாரத்தில் சிறப்பான வசூலைப் பெற்ற இந்தப் படம் உலகளவில் 120 கோடி ரூபாய் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. டாக்டர் சைலேஷ் கொலனு இயக்கிய இந்தப் படத்தை வால் போஸ்டர் சினிமா பேனரில் பிரசாந்தி டிப்பிர்னேனி, நானியின் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஹிட்டடித்த ஹிட் 3
சூப்பர் ஹிட் படங்களான ஹிட், ஹிட் 2 ஆகியவற்றைத் தொடர்ந்து வரும் இந்தத் தொடரின் மூன்றாவது படம் ஹிட் 3. ரிலீஸ் ஆன முதல் வார இறுதியிலேயே இப்படம் நூறு கோடி கிளப்பில் இடம் பிடித்து சாதனை படைத்தது. நூறு கோடி கிளப்பில் இடம் பிடித்த நானியின் மூன்றாவது படமாக ஹிட் 3 மாறியது. அதுமட்டுமின்றி இந்த சாதனையை மிக வேகமாக அடைந்த நானி படமும் இதுதான். ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்த இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.
ஹிட் 3 ஓடிடி ரிலீஸ்
இந்தப் படம் இந்தியாவைத் தவிர வெளிநாடுகளிலும் சிறப்பான வசூல் செய்தது. வெளிநாடுகளில் இருந்து 2 மில்லியன் டாலர் வசூல் செய்த நானியின் மூன்றாவது படமாகும். இந்தப் படம் முதல் வாரத்திலேயே முதலீட்டையும் லாபத்தையும் ஈட்டியது. இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் நானி ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளார். இந்நிலையில் ஹிட் 3 படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே 29ந் தேதி அன்று நெட்ஃபிளிக்ஸ் OTTயில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஹிட் 3 படக்குழு
ஹிட் 3 திரைப்படத்திற்கு சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இசையமைப்பாளராக மிக்கி ஜே மேயர் பணியாற்றி இருந்தார். அதேபோல் படத்தொகுப்பு பணிகளை எடிட்டர் கார்த்திக் ஸ்ரீனிவாஸ் ஆர் மேற்கொண்டு இருந்தார். மேலும் இப்படத்தில் புரொடக்ஷன் டிசைனராக ஸ்ரீ நாகேந்திர தங்கல், கதை ஆசிரியராக சைலேஷ் கொலனு, நிர்வாக தயாரிப்பாளராக எஸ். வெங்கட்ரத்னம் (வெங்கட்), ஒலிக்கலவை: சுரன் ஜி, இணை இயக்குநராக வெங்கட் மத்திராலா என மிகப்பெரிய டெக்னிக்கல் டீம் பணியாற்றி இருந்தது.