நந்தமுரி பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா?
நந்தமுரி பாலகிருஷ்ணா இன்று (ஜூன் 10) தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது சொத்து மதிப்பு விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

நந்தமுரி பாலகிருஷ்ணா பிறந்தநாள் (Nandamuri Balakrishna)
ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகனும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகருமான இருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா இன்று தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான இவர் நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத் திறமையாளர் ஆவார். 65 வயதை கடந்த போதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார்.
ரூ.100 கோடி வசூலைக் குவிக்கும் பாலகிருஷ்ணாவின் படங்கள்
1974 ஆம் ஆண்டு ‘தத்தம்மா கலா’ என்கிற படத்தின் மூலமாக பாலகிருஷ்ணா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரது பஞ்ச் வசனம், ஆக்ஷன், சண்டைக் காட்சிகள், அவரின் நடிப்பு என பாலகிருஷ்ணாவிற்கு தெலுங்கில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே கொட்டி கிடக்கின்றனர். இவரது கண் அசைவில் கார்கள் பறப்பது, ஒரு உதையில் லாரியை புரட்டி விடுவது என்று வீர தீர சாகசங்களை தனது படங்களில் செய்து ரசிகர்களை தன்வசமாக்கி இருக்கிறார். அதேபோல் பாலகிருஷ்ணாவின் படங்களும் வசூலில் சாதனை புரிந்து வருகின்றன. இவரின் பல படங்கள் ரூ.100 கோடி வசூலைக் குவித்து சாதனை புரிந்து இருக்கின்றன.
பாலகிருஷ்ணாவின் சொத்து விவரங்கள்
நந்தமுரி பாலகிருஷ்ணா ஒரு படத்திற்கு ரூ.20 முதல் ரூ.30 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இருப்பினும் விளம்பரங்களில் நடிப்பதன் மூலமாக ரூ.70 முதல் ரூ.80 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வசிக்கும் இவரின் வீட்டின் மதிப்பு ரூ.50 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. அரண்மனை மாதிரி கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் நீச்சல் குளம், லிஃப்ட் என சகல வசதிகளும் இருக்கிறது. அதே பகுதியில் மிகப்பெரிய மேன்ஷன் ஒன்றும் பாலகிருஷ்ணாவுக்கு சொந்தமாக உள்ளது. மேலும் சில இடங்களில் சொந்தமாக வீடுகளும் உள்ளது.
பாலகிருஷ்ணா வசமுள்ள நகைகள் மற்றும் கார்கள்
இது மட்டுமல்லாமல் பல இடங்களில் நிலங்களும், பண்ணை வீடுகளும் சொந்தமாக உள்ளது. பாலகிருஷ்ணாவுக்கு ரூ.450 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக தெலுங்கு மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும் அவரிடம் ஆறு கிலோ அளவிற்கு தங்க நகைகளும், 156 கிலோ வெள்ளியும், 580 காரட் வைரமும் சொத்தாக இருப்பதாக தெலுங்கு மீடியாக்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது மட்டுமல்லாமல் இரண்டு கோடி மதிப்பிலான bmw 7 சீரிஸ், போர்ஸ், பனமேரா, பென்ஸ், ரேஞ்ச் ரோவர் போன்ற கார்கள் வைத்துள்ளாராம். பாலகிருஷ்ணா மீது அடிக்கடி சர்ச்சைகள் எழுந்தாலும் அவருக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது.
சம்பளத்தை இருமடங்காக உயர்த்திய பாலகிருஷ்ணா
அவரின் 65 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துவரும் ‘அகண்டா 2’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், பாலகிருஷ்ணா நடித்த ‘தாகு மகராஜ்’ திரைப்படமும் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இதனால் இதுவரை ரூ.12 கோடி சம்பளம் வாங்கி வந்த ‘அகண்டா 2’ திரைப்படத்திற்கு தனது சம்பளத்தை ரூ.30 கோடியாக உயர்த்தியுள்ளார். மற்ற நடிகர்களை ஒப்பிடும் பொழுது குறைந்த சம்பளமே வாங்கினாலும், கோடிக்கணக்கில் சொத்துக்களை கொண்ட நடிகராக பாலகிருஷ்ணா வலம் வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

