டோலிவுட் மன்மதனுக்கே இந்த நிலையா! பாலிவுட் நடிகையின் பதிலைக் கேட்டு ஆடிப்போன நாகார்ஜுனா!
டோலிவுட்டின் மன்மதன் என்று அழைக்கப்படுபவர் கிங் நாகார்ஜுனா. பல ஹீரோயின்கள் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், நாகார்ஜுனா சேர்ந்து நடிக்க விரும்பும் ஹீரோயின் யார் தெரியுமா?

Nagarjuna lover
டோலிவுட்டின் மன்மதன் என்று அழைக்கப்படுபவர் கிங் நாகார்ஜுனா. பல ஹீரோயின்கள் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், நாகார்ஜுனா சேர்ந்து நடிக்க விரும்பும் ஹீரோயின் யார் தெரியுமா?
Nagarjuna laughing
கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் நாகார்ஜுனா பல காதல் படங்களில் நடத்துள்ளார். நிஜத்திலும் பல ஹீரோயின்கள் அவரை நேசித்தார்கள். அவரும் பலரைக் காதலித்து இருக்கிறார். சினிமாவில் தெலுங்கு ஹீரோயின்கள் மட்டுமின்றி பாலிவுட் அழகிகளுடனும் நாகார்ஜுனா ரொமான்ஸ் செய்திருக்கிறார்.
Nagarjuna family
எத்தனையோ ஹீரோயின்கள் தன்னுடன் நடிக்கத் தயாராக இருந்தாலும், நாகார்ஜுனா ஒரு ஹீரோயினை விரும்பி தேடினார். அவர் தன்னுடன் நடித்தால் அந்தப் படம் ஹிட் தான் என்று நினைத்தார் நாகார்ஜுனா.
Nagarjuna relationships
ஆனால் அந்த நடிகை கேட்ட சம்பளத்தை அறிந்து அப்படியே ஆடிப் போய்விட்டார். அந்த ஹீரோயின் வேறு யாரும் இல்லை, பாலிவுட் குயினாக வலம் வந்த மாதுரி தீட்சித் தான். ஒரு காலத்தில் பான் இந்தியா மார்க்கெட்டை தன்வசம் வைத்திருந்த மாதுரியை தன் படத்தில் கமிட் செய்ய வேண்டும் என்று நாகார்ஜுனா கடுமையாக முயற்சி செய்தார்.
Nagarjuna and Madhuri Dixit
நாகார்ஜுனா ஜோடியா நடித்து டோலிவுட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தபோது, அவர் சொன்ன பதில் அனைவரையும் ஷாக் ஆக வைத்தது. 15 நாட்கள் கால்ஷீட்டுக்கு ரூ.15 கோடி சம்பளம் கேட்டாராம் மாதுரி. அதிர்ந்து போன நாகார்ஜுனா, மனசை மாற்றிக்கொண்டு வேறொரு ஹீரோயினைத் தேடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
Madhuri Dixit in Tollywood
பல பாலிவுட் நடிகைகள் தெலுங்கில் ஸ்டார் ஹீரோக்குடன் ஜோடியாக நடித்துள்ளனர். ஆனால் பாலிவுட் குயின் மாதுரி தீட்சித் மட்டும் டோலிவுட் பக்கம் தலை காட்டவே இல்லை. ஆனால், இப்போது ஸ்டார் ஹீரோயின்கள் எல்லாம் தெலுங்கு படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.