வரி ஏய்ப்பு சர்ச்சையில் சிக்கிய நாகர்ஜுனாவின் ஸ்டுடியோ - தெலுங்கு திரையுலகில் பரபரப்பு !
Nagarjuna studio embroiled in tax evasion controversy : ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சினிமா ஸ்டுடியோக்களான அன்னபூர்ணா ஸ்டுடியோ மற்றும் ராமா நாயுடு ஸ்டுடியோஸ் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 முக்கிய குடும்பம்:
தெலுங்குத் திரைப்பட துறையை உருவாக்கிய முக்கியமான இரு குடும்பங்கள் என்றால், அது மறைந்த நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவ் குடும்பமும், பிரபல தயாரிப்பாளர் டி. ராமா நாயுடு குடும்பமும் தான். பல தசாப்தங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவின் மையம் சென்னை என்பதுதான் உண்மை. அப்போது பெரும்பாலான படப்பிடிப்புகளும், தயாரிப்புகளும் சென்னை ஸ்டுடியோக்களிலேயே நடந்து வந்தன.
ஹைதராபாத்துக்கு மாற்றம்:
ஆனால், 80களின் நடுவே பெரிய மாற்றம் ஏற்பட்டது. தெலுங்கு சினிமா தன்னுடைய அடையாளத்தையும், தனித்துவமான தொழில்முறையையும் உருவாக்கிக்கொள்ள வேண்டிய நேரம் வந்ததால், பல தயாரிப்பாளர்கள் படிப்படியாக ஹைதராபாத்தை நோக்கி நகர ஆரம்பித்தனர். நகரின் வளர்ச்சி, நிலம் கிடைக்கும் வசதி, தொழில்நுட்ப உதவிகள் இவை அனைத்துமே அந்த முடிவுக்கு காரணம் எனலாம். சில ஆண்டுகள் கழித்து, சென்னையில் இருந்த பெரும்பாலான தெலுங்கு படக்குழுக்கள் முழுவதும் ஹைதராபாத்துக்கே மாறிவிட்டன.
அன்னபூரணா ஸ்டுடியோஸ்:
அந்த காலத்தில் தான், நாகேஸ்வரராவ் மற்றும் ராமா நாயுடு ஆகிய இருவரும் ஹைதராபாத்தில் புதிய ஸ்டுடியோக்களை நிறுவ முடிவு செய்தனர். சினிமாவுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஸ்டுடியோக்கள், தொழில்துறையின் வளர்ச்சிக்கு பெரிய தூண்களாக மாறியது. அன்னபூரணா ஸ்டுடியோஸ், அக்கினேனி குடும்பத்தினர் நடத்தும் ஸ்டுடியோ. அவர்கள் தலைமுறைகள் இந்த ஸ்டுடியோவை பராமரித்து, காலத்துக்கு ஏற்ப புதுப்பித்து வருகின்றனர்.
ராமா நாயுடு ஸ்டுடியோஸ்:
அதேபோல், ராமா நாயுடு ஸ்டுடியோஸ் என்ற பெயரில் மற்றொரு பெரிய பேர்லவல் தயாரிப்பு மையம் ராமா நாயுடு குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. இன்று கூட இவ்விரு ஸ்டுடியோக்களும் பல திரைப்படங்களுக்கும், தொடர்களுக்கும் முக்கியமான படப்பிடிப்பு தளங்களாக உள்ளன. ஆனால், தற்போது இந்த இரண்டு ஸ்டுடியோக்களும் ஹைதராபாத் மாநகராட்சியிடம் வரி ஏய்ப்பு செய்ததாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், இந்த ஸ்டுடியோக்கள் தங்கள் முழு பரப்பளவுக்கு ஏற்ப வரி செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.
வரி ஏய்ப்பு:
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவலின்படி, 1,92,000 சதுர அடி பரப்பளவு கொண்ட அன்னபூரணா ஸ்டுடியோஸ், அதில் 81,000 சதுர அடிக்கு மட்டும் வரி செலுத்தியிருக்கிறது. மேலும், செலுத்த வேண்டிய 11 லட்சம் ரூபாய் வரிக்குப் பதிலாக, அவர்கள் 49,000 ரூபாய் மட்டுமே செலுத்தியதாக கூறப்படுகிறது. அதேபோல், ராமா நாயுடு ஸ்டுடியோஸ் நிர்வாகமும், செலுத்த வேண்டிய 2,73,000 ரூபாய் வரிக்கு பதிலாக வெறும் 76,000 ரூபாய் மட்டுமே செலுத்தியதாக மாநகராட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் பரபரப்பு:
இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் இரு ஸ்டுடியோக்களுக்கும் அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். விரிவான விளக்கம், பாக்கி வரி விவரங்கள், திருத்தப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவின் வரலாற்றில் முக்கிய தடம் பதித்த இந்த இரண்டு ஸ்டுடியோக்கள் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது தொழில்துறையிலும் பேசுபொருளாக உள்ளது. ஸ்டுடியோக்கள் அதிகாரப்பூர்வமாக பதில் அளிக்கும் வரை இந்த விஷயம் தொடர்ந்து விவாதமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.