நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு டும்... டும்... டும்! திருமண கோலத்தில் வெளியான புகைப்படத்திற்கு குவியும் வாழ்த்து!
'நாதஸ்வரம்' சீரியல் நடிகைக்கு திருமணம் நடந்த புகைப்படத்தை அவர் வெளியிடவே, ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
முன்பெல்லாம் வெள்ளி திரை வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் திருமணத்திற்குப் பின், சின்னத்திரையை தேர்வு செய்து நடித்து வந்தனர். ஆனால் கடந்த சில வருடங்களாக, சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகும், நடிகைகள் வெள்ளித்திரைக்கு ஈசியாக நுழைந்து, பட வாய்ப்புகளை அள்ளித் வருகிறார்கள். எனவே தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என எந்தவித பாகுபாடும் இன்றி ரசிகர்களும் ரசிக்க துவங்கிவிட்டனர்.
சின்னத்திரையில் எப்போதுமே, குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல்களுக்கு, பல இல்லத்தரசிகள் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த 2010ஆம் ஆண்டு, ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான 'நாதஸ்வரம்' தொடரில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு எப்போதுமே தனி மவுசு தான். இந்த சீரியலின் மூலம் நடித்த மிகவும் பிரபலமானவர் கீதாஞ்சலி.
இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக அவரே... கூறியிருந்த நிலையில், திருமணமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இது பெற்றோரால் பார்த்து நிச்சயித்த திருமணம் என்றாலும், பெண் பார்க்கும் படலம் முடிந்ததுமே வருங்கால கணவரை காதலிக்க துவங்கி விட்டதாக, கெத்தா தெரிவித்திருந்தார்.
காரைக்குடியை சேர்ந்த கீதாஞ்சலி நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக நாதஸ்வரம் தொடர் தொடரில் நடிக்கத் தொடங்கி, பின்னர் சீரியலில் பிரபல நடிகையாக மாறினார். இந்நிலையில் இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.