மாஸ் போட்டோவுடன்.. நல்ல சேதி சொன்ன தனுஷ்...அடுத்த அதிரடியும் ரெடி...
நானே வருவேன் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. தனுஷ் வெளியிட்டுள்ள இந்த அப்டேட்டுடன் அவரது மாஸ் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

naane varuven
தனுஷ் - செல்வராகவன் கூட்டணி :
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என ஹிட் கொடுத்தவர்கள் தனுஷ் - செல்வராகவன். துள்ளுவதோ இளமை மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாக தனுஷ். தற்போது பான் இந்திய ஹீரோவாகி விட்டார். இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தன் அண்ணனுடன் கைகோர்த்துள்ளார் தனுஷ்.
naane varuven
மாஸ் காம்போவில் நானே வருவேன்
செல்வராகவன் நானே வருவேன் திரைப்படம் தயாராகி வருகிறது. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்தடுத்து இந்த படத்தின் அப்டேட் வெளிவந்த வண்ணம் உள்ளது.
naane varuven
இரட்டை வேடத்தில் தனுஷ் :
நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்தப் படத்தின் இயக்குநரான செல்வராகவன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
naane varuven
3க்கு பிறகு பிரபுவுடன் தனுஷ் :
இந்தப் படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளார். தனுஷ் நடித்த '3' படத்திற்குப் பிறகு நடிகர் பிரபு, அவருடன் இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
naane varuven
சமீபத்தில் வெளியான போஸ்டர் :
சமீபத்தில் நானே வருவேன் பட போஸ்ட் வெளியானது.அதில் ஒரு லுக்கில் ஸ்டைலிஸ் இளைஞராக இருக்கும் தனுஷ், மற்றொரு லுக்கில் நடுத்தர வயது தோற்றம் கொண்டு உள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
naane varuven
சர்ச்சையில் சிக்கிய தனுஷ் :
பின்னர் நானே வருவேன் படத்திலிருந்து வெளியான தனுஷ் போஸ்ட் சர்ச்சையை கிளப்பியது. அந்த போஸ்டரில் தனுஷ் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இருந்தது. முன்னதாக, வேலையில்லா பட்டதாரி, மாறன் உள்ளிட்ட படங்களில், தனுஷ் சிகரெட் பிடித்த காட்சிகள் சர்சையை கிளப்பிய நிலையில் மீண்டும் சிகரெட் பிரச்சனை கிளம்பியது.
naane varuven
வைரலாக படப்பிடிப்பு தள புகைப்படம் :
இதற்கிடையே நானே வருவேன் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன், எல்லி அவ்ரம் ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
naane varuven
புதிய அப்டேட் :
இந்நிலையில் இன்று தனுஷ் கூல் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதாவது படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறியுள்ள தனுஷ் நானே வருவேன் மாஸ் கெட்டப்பையும் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.