அச்சு அசல் பாகுபலி அனுஷ்காவை போல் மாறிய விஜய் டிவி சீரியல் நடிகை ரக்ஷிதா! பாவாடை தாவணியில் அம்புட்டு அழகு!
சீரியல்கள் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரை வாய்ப்புகளையும் கை பற்றியுள்ள, நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி மிளிரும் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
ரக்ஷிதா முதல் முறையாக கடத்த 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான, பிரிவோம் சந்தோப்போம் தொடர் மூலம் அறிமுகமானார்.
இந்த தொடரில் இவரது கணவரும் நடித்திருந்தார். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட காதல் திருமணத்திலும் முடிந்தது.
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து அடுத்தடுத்த தொடர்களில் நடித்து அசத்தி வரும் இவர், 10 க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்திருந்தாலும், இவரது சீரியல் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது 'சரவணன் மீனாட்சி' தொடர்தான்.
இந்த தொடரில் அடுத்தடுத்து பல ஹீரோக்கள் மாறினாலும், ஒரே ஹீரோயினாக நிலைத்து நின்று, சீரியலை முடித்து விட்டு வெளியேறினார்.
இந்த சீரியல் மூலம் கிடைத்த பிரபலம், இவருக்கு திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று தந்தது. அந்த வகையில் இயக்குனர் ராதா மோகன் இயக்கிய 'உப்புக்கருவாடு' படத்தில் கருணாகரனும் ஜோடியாக நடித்தார்.
இந்த படத்தை தொடர்ந்து மற்ற படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், தற்போது மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கலக்கி வருகிறார்.
மேலும் ஒரு படத்திலும் கமிட் ஆகி உள்ளார். இந்த தகவல் சமீபத்தில் வெளியாக இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது வித்யாசமான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது, பாகுபலி அனுஷ்காவாகவே மாறி இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதில் நீல நிற பாவாடை தாவணி போல்... மகாராணியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.