ஒரு கவிதையை சூப்பர் ஹிட் பாடலாக மாற்றி மனதை உருக வைத்த நா முத்துக்குமார்!
கவிஞர் நா முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளான இன்று அவர் எழுதிய ஒரு சூப்பர் ஹிட் பாடலின் சிறப்பம்சம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Na Muthukumar Birthday
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு கலைஞர்களில் நா முத்துக்குமாரும் ஒருவர். அவரது 50வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் மறைந்தாலும், அவரது பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் வண்ணம் இருக்கிறது. ஜிவி பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் மட்டுமின்றி அறிமுக இசையமைப்பாளர்களுக்கும் பல ஹிட் பாடல்களை நா முத்துக்குமார் கொடுத்திருக்கிறார். அப்படி அவர் எழுதிய ஒரு மாஸ்டர் பீஸ் பாடலை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
நா முத்துக்குமார் பாடல் ரகசியம்
நா முத்துக்குமார் குறுந்தொகை என்கிற தலைப்பில் காதல் கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார். ஒரு காதலன் தன்னுடைய காதலியை எப்பயெல்லாம் பார்த்துக் கொள்வேன் என்பதை சொல்வதைப் போல் அந்த கவிதை அமைந்திருக்கும். அதில், “விடிகாலை நீ தூங்க விண்மீனில் விளக்கு வைப்பேன்... வெந்நீரில் நீ குளிக்க விறகாகி தீக்குளிப்பேன்” என்கிற வரியை எழுதி இருப்பார். இந்த வரியை ஏதோ ஒரு பாடலில் கேட்டது போல் இருக்கிறதா... ஆம் இதை ஒரு பாடலிலும் பயன்படுத்தியிருக்கிறார் நா முத்துக்குமார். அது என்ன பாடல் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கவிதையை பாடலாக மாற்றிய நா முத்துக்குமார்
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில், ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் ஹரிச்சரண் பாடிய ‘உனக்கென இருப்பேன்’ என்கிற பாடலில் தான் நா முத்துக்குமார், தன்னுடைய கவிதையில் எழுதிய அதே வரிகளை பயன்படுத்தி இருந்தார். “வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்லை... வருங்காலம் காயம் ஆச்சு” இது ஒரு பெரும் சோகத்தை கடத்தும் வரிகளாக இருந்தாலும், அந்த சோகத்தில் இருந்து மீண்டு வர நம்பிக்கை கொடுக்கும் வரிகளாகவும் இருக்கும். காதல் படத்தில் எழுதிய இந்த வரிகளை பாடலாசிரியர் நா முத்துக்குமார் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த ஒரு சூப்பர் ஹிட் பாடலிலும் பயன்படுத்தி இருப்பார்.
நா முத்துகுமாரின் வார்த்தை ஜாலம்
“கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா” என காதல் படத்தில் எழுதிய பாடல் வரியை தேவதையை கண்டேன் படத்தில் “கல்லறை மேல்தான் வைத்திடும் பூக்கள் கூந்தலை சேராதே” என அந்த சூழலுக்கு ஏற்றார் போல் எழுதி இருப்பார். இப்படி கல்லறை, பூக்கள் என இரண்டையும் தொடர்பு படுத்தி கவிஞர் நா முத்துக்குமார் வெவ்வேறு கோணத்தில், வெவ்வேறு சிச்சுவேஷன்களுக்கு ஏற்றார் போல் அழகாக எழுதியிருப்பார். அதுமட்டுமின்றி தேவதையை கண்டேன் பட பாடலில் வரும் லிரிக்கை டங் ட்விஸ்ட்டர் போல் எழுதியிருப்பார். அது என்ன வரி என்றால், “தோழியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய்” என்கிற வரி தான். இந்த வரியை வேகமாக சொல்லிப் பாருங்கள் அது எவ்வளவு கஷ்டம் என்பது உங்களுக்கே புரியும்.