MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • JJayalalithaa: எனது இடத்தில் இவர்தான்.! ஜெயலலிதா கை காட்டிய ஒருவர்.! யார் தெரியுமா?

JJayalalithaa: எனது இடத்தில் இவர்தான்.! ஜெயலலிதா கை காட்டிய ஒருவர்.! யார் தெரியுமா?

தமிழக அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென அழியாத முத்திரை பதித்த ஜெயலலிதா குறித்து பல ரகசியங்கள் இன்னும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தனது ரோல் இவருக்கு பொருந்தும் என அவர் சொன்னது யாரை தெரியுமா?

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : May 15 2026, 06:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அரசியல் ரகசியங்கள்
Image Credit : Asianet News

அரசியல் ரகசியங்கள்

தமிழக அரசியலிலும், இந்திய சினிமாவிலும் தனக்கென ஒரு பேரரசை உருவாக்கிய ஜெயலலிதா பற்றி இன்று வரை ஏராளமான ரகசியங்கள் பேசப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால், தற்போது மீண்டும் வைரலாகும் ஒரு தகவல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எனது ரோல் இவருக்கு சரியாக இருக்கும்” என்று ஜெயலலிதா மனதில் நினைத்திருந்த நடிகை யார் தெரியுமா? அந்த பெயர் வெளியாகியதும் அரசியல் வட்டாரமும், சினிமா ரசிகர்களும் ஒரே நேரத்தில் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சினிமாவை கடந்த ஜெயலலிதாவின் பார்வை
Image Credit : Asianet News

சினிமாவை கடந்த ஜெயலலிதாவின் பார்வை

ஜெயலலிதா ஒரு அரசியல் தலைவராக மட்டும் இல்லாமல், சினிமாவின் மொழியையும், நடிப்பின் தாக்கத்தையும் ஆழமாக புரிந்திருந்தவர். எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த காலத்திலேயே அவர் தனது உடல்மொழி, வசன உச்சரிப்பு மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதனால் தான், தனது வாழ்க்கையை யார் திரையில் பிரதிபலிக்க முடியும் என்பதில் கூட அவர் மிகவும் கவனமாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா மனதில் இருந்த நடிகை

இந்த தகவலை பிரபல தொகுப்பாளர் Simi Garewal தான் வெளிப்படுத்தியிருந்தார். ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான ‘தலைவி’ திரைப்படம் வெளியான சமயத்தில், “அம்மா தனது கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருந்தார்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஒரு வரி தகவலே தற்போது இணையத்தில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. காரணம், ஜெயலலிதாவுக்கு மிகவும் பொருத்தமான முகமாக ஐஸ்வர்யா ராயை அவர் நினைத்திருப்பது பலருக்கும் புதுசாக இருந்தது.

34
‘இருவர்’ படத்தில் தொடங்கிய தொடர்பு
Image Credit : others

‘இருவர்’ படத்தில் தொடங்கிய தொடர்பு

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ திரைப்படத்தில், ஜெயலலிதாவை நினைவுபடுத்தும் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். அது அவரது முதல் தமிழ் திரைப்படம் என்பதாலும், அவரது தோற்றம் மற்றும் திரைநடிப்பு ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றது.

அந்த படத்தை பார்த்த பிறகு, “ஜெயலலிதாவின் இளமைக் கால தோற்றத்தை மிக நெருக்கமாக கொண்டு வந்த நடிகை” என்ற பாராட்டும் ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. அதுவே பின்னர் ஜெயலலிதாவின் மனதில் ஒரு தனி இடத்தை உருவாக்கியதாக சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன.

அரசியலுக்கும் சினிமாவுக்கும் இடையிலான இணைப்பு

தமிழக அரசியலில் சினிமாவுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என பல தலைவர்கள் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். அந்த வரிசையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை எப்போதுமே சினிமாவை விட சினிமாவாக இருந்தது.

அதனால் தான், அவரது வாழ்க்கையை யார் நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வி பல ஆண்டுகளாக ரசிகர்களிடையே இருந்தது. ஆனால், அதற்கான பதிலை ஜெயலலிதாவே தனது விருப்பத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் என்பதே தற்போது பேசப்படும் விஷயமாகியுள்ளது. 

44
ஜெயலலிதா சொன்னது நடக்கவில்லை
Image Credit : Instagram

ஜெயலலிதா சொன்னது நடக்கவில்லை

பின்னர் உருவான ‘தலைவி’ திரைப்படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது. இருந்தாலும், “ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தால் படம் இன்னும் வேறு அளவுக்கு சென்றிருக்கும்” என்று சில ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பல ஆண்டுகள் கழித்து வெளிவந்த இந்த தகவல், ஜெயலலிதாவின் சினிமா ரசனை பற்றியும், அவர் வைத்திருந்த கலை பார்வை பற்றியும் மீண்டும் பேச வைக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிக் பாஸ் வீட்டில் அனல்பறக்கும் டாஸ்க்... டைமண்ட் பாக்ஸை திறந்த கரிஷ்மா; அவினாஷிடம் பொங்கிய ஜேசன்.. என்ன நடந்தது?
Recommended image2
Theatre Releases : ஜெயிலர் 2 மட்டுமில்ல... ஆயுத பூஜை லீவுக்கு இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா? முழு லிஸ்ட் இதோ
Recommended image3
ஆஸ்கர் விருதுக்கு சென்ற முதல் தமிழ் படம் எது தெரியுமா? சிவாஜி டூ கமல் வரை வியக்க வைக்கும் வரலாறு!
Related Stories
Recommended image1
Now Playing
நடிகை ஸ்ரீபிரியா ஒரு இயக்குனரா ?....Cinema News | Exclusive Video !
Recommended image2
Now Playing
Cinema Secret: செட் போடாமல் நடந்த சூட்டிங்.. ஸ்பாட்டிலேயே ஆடிய டான்ஸ்.. 'முட்ட கலக்கி' சுவாரஸ்யங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved