ப்ரீ டைம்ல ஆட்டோ ஓட்டும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்: இலவசமாக ஏற்றி இறக்கிவிடுவாராம்!
Music Director Santhosh Narayanan Working as a Auto Driver : இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஓய்வு நேரத்தில் ஆட்டோ ஓட்டுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Santhosh Narayanan Education, Santhosh Narayanan Playback Singer
Music Director Santhosh Narayanan Working as a Auto Driver : தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். திருச்சியில் பிறந்து வளர்ந்த சந்தோஷ் நாராயணன் கம்யூட்டர் இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். கல்லூரி படிப்பை முடித்த சந்தோஷ் நாராயணன், ரெக்கார்டிங் இன்ஜினியரிங்கில் புரோகிராமராக பணியாற்றினார். அதன் பிறகு தான், இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வந்த அட்டகத்தி படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.
Music Composer Santhosh Narayanan, Auto Driver Santhosh Narayanan
இந்தப் படத்தைத் தொடர்ந்து சூது கவ்வும், மெட்ராஸ், காலா, கபாலி, வட சென்னை, அந்தகன், வா வாத்தியார் என்று ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும் ரஜினிகாந்தி நடித்த பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். பா ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவரும் பல படங்களில் ஒன்றாக பணியாற்றியிருக்கின்றனர்.
Santhosh Narayanan Movies, Santhosh Narayanan Filmography
இப்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்திற்கு இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
Auto Driver Santhosh Narayanan, Santhosh Narayanan Movies
இசையமைப்பாளராக மட்டுமின்றி பின்னணி பாடகராகவும் உள்ளார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற பொலக்கட்டும் பற பற என்ற பாடலை இவர் பாடியுள்ளார். கடந்த ஆண்டு திரைக்கு வந்த ராயன் படத்தில் இடம் பெற்ற வாட்டர் பாக்கெட் என்ற பாடலை இவர் பாடியிருக்கிறார். தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் சிக்கந்தர் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். சினிமாவையும் தாண்டி ஓய்வு நேரங்களில் சந்தோஷ் நாராயணன் ஆட்டோ ஓட்டுவாராம். சொந்தமாக ஆட்டோ ஒன்று வைத்திருக்கும் சந்தோஷ் நாராயணன் விருப்பப்பட்டால் ஆட்டோ ஓட்டுவாராம்.
Santhosh Narayanan Filmography, Auto Driver Santhosh Narayanan
தன்னை யார் என்று தெரியாதவர்களுக்கு இலவசம் என்று கூறி விடுவாராம். ஆனால், தன்னை யார் என்று அடையாளம் கண்டுகொள்ளும் மக்களை ஆட்டோவில் ஏற்றுவதில்லையாம். இது குறித்து சந்தோஷ் நாராயணன் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. என்றாலும் கூட இப்படியொரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனினும், சினிமா பிரபலங்கள் ஒன்றுக்கும் அதிகமான பிஸினஸ்களில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஹோட்டல், நகைக்கடை, தயாரிப்பு நிறுவனம், ஸ்டூடியோ என்றெல்லாம் வைத்திருக்கும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் சந்தோஷ் நாராயணன் சற்று வித்தியாசமானவராக இருக்கிறார்.