- Home
- Cinema
- Deva Net Worth : இசையமைப்பாளர் தேவா இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா? அவரின் சொத்து மதிப்பு இதோ
Deva Net Worth : இசையமைப்பாளர் தேவா இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா? அவரின் சொத்து மதிப்பு இதோ
Music Director Deva Assets Details : இசையமைப்பாளர் தேவா காலமான நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Deva Net Worth
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தனது இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் தேனிசைத் தென்றல் தேவா. மெலடி, காதல் பாடல்கள், குத்துப்பாடல்கள், கானா என எந்த வகையான இசையாக இருந்தாலும் அதில் தனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கியவர். குறிப்பாக, 90களில் தேவாவின் இசையில் வெளியான பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
ரஜினிக்கு மாஸ் அடையாளம் கொடுத்த தேவா!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் தேவாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. 'அண்ணாமலை' திரைப்படத்தில் ரஜினியின் பெயர் திரையில் தோன்றும்போது ஒலிக்கும் வகையில் தேவா உருவாக்கிய அதிரடியான தீம் மியூசிக், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு ரஜினியின் பெயர் திரையில் இடம்பெறும்போதெல்லாம் அந்த இசை ஒலிப்பது ஒரு தனி அடையாளமாகவே மாறியது. இன்றும் அந்த இசையைக் கேட்டாலே ரசிகர்களுக்கு சூப்பர்ஸ்டாரின் மாஸ் என்ட்ரிதான் நினைவுக்கு வரும். தற்போது திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் ஜெயிலர் 2 படத்திலும் இந்த தீம் மியூசிக் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
90களில் கொடிகட்டிப் பறந்த தேவா!
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் தேவா. ஆண்டுக்கு 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு அவரைத் தேடி வாய்ப்புகள் குவிந்தன. அண்ணாமலை, பாட்ஷா, ஆசை, காதல் கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க, அவ்வை சண்முகி, கண்ணெதிரே தோன்றினாள், நேருக்கு நேர், வாலி, குஷி, பகவதி என தேவாவின் இசையில் வெளியான ஏராளமான திரைப்படங்களின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக, இவரது மெலடி பாடல்கள் காதலர்களின் மனதைக் கொள்ளையடித்த அதே நேரத்தில், கானா பாடல்கள் சாதாரண மக்களையும் ஆட்டம் போட வைத்தன.
2K கிட்ஸ்களும் கேட்க வேண்டிய தேவாவின் பாடல்கள்!
தேவாவின் இசையில் உருவான பாடல்களுக்கு இன்றும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக, 90ஸ் கிட்ஸ்களின் பள்ளி மற்றும் கல்லூரிக் கால நினைவுகளோடு அவரது பாடல்கள் இரண்டறக் கலந்துள்ளன. அந்தக் காலகட்டத்தில் வெளியான தேவாவின் பாடல்களை இன்றைய தலைமுறையினரும் யூடியூப் உள்ளிட்ட தளங்களில் கேட்டு ரசிக்கலாம். காலங்கள் மாறினாலும் நல்ல இசைக்கு அழிவில்லை என்பதற்கு தேவாவின் எவர்கிரீன் பாடல்களே சிறந்த உதாரணம். அவர் மறைந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தேனிசைத் தென்றலின் இசைக்கான இடம் இன்றும் அப்படியேதான் இருக்கிறது.
தேவாவின் சொத்து மதிப்பு என்ன?
இசையமைப்பாளர் தேவா, சினிமாவில் மட்டுமின்றி இசை நிகழ்ச்சிகள் நடத்தியும் சம்பாதித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 20 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து பாப்புலர் ஆனார். தேவாவின் தம்பிகளான சபேஷ் - முரளி இருவரும் தமிழில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இதில் தேவாவின் சகோதரர் சபேஷ் கடந்த ஆண்டு அக்டோபர் 23ந் தேதி காலமானார். அவர் மறைந்த ஒரே ஆண்டில் தேவா மரணமடைந்திருக்கிறார். இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

