கோலாகலமாக நடைபெற்ற பிரபல இசையமைப்பாளரின் இரண்டாவது திருமணம்
சமீபத்தில் மனைவியை விவகாரத்து செய்ததாக அறிவித்திருந்த பிரபல இசையமைப்பாளர் டி இமான் இன்று மறுமணம் செய்து கொண்டுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

D Imman
இசையால் கவர்ந்திழுக்கும் இமான் :
சீமை ராஜா, விசுவாசம்,அண்ணாத்த, சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் என தனது இசையால் பாரபட்சமில்லாமல் ரசிகர்களை ஈர்த்தவர் டி.இமான். இவர் கன்னடம், மலையாளம் , தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படத் துறையில் கலக்கும் இமான் கடந்த 2002 இல் தமிழன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் சுமார் 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
d imman
விருதுகளை குவித்த இசை சிகரம் :
இசை உலகின் தனக்கென தனி ராஜ்ஜியத்தை அமைத்துள்ள டி.இமான். இவர் பிலிம்பேர் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ,விஜய் விருதுகள் , எடிசன் விருது, ஆனந்த விகடன் சினிமா விருது மற்றும் ஜீ தமிழ் விருது உள்ளிட்ட பல விருதுகளை தட்டி சென்றுள்ளார்.மேலும் தேசிய திரைப்பட விருதை வென்ற ஐந்தாவது தமிழ் இசையமைப்பாளர் இவர் தான்.
D imman family
மனைவியை விவகாரத்து செய்த இமான் :
இமான் - மோனிகா இருவரும் கடந்த 2008-ம் ஆண்டு செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதமே இருவரும் விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது. இவர்களது அதிகாரப்பூர்வ விவாகரத்து குறித்து சமீபத்தில் ட்வீட்டில் பதிவிட்ட இமான்..'எனது நலம் விரும்பிகள் மற்றும் தீவிர இசை ஆர்வலர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்ததற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எங்களின் வாழ்க்கை வெவ்வேறு பாதைகளில் செல்லவே, மோனிகா ரிச்சர்டும் நானும் நவம்பர் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து, இனி கணவன் மனைவியாக இருக்க முடியாது என்று முடிவெடுத்தோம். என அறிவித்தார்..
D.Imman
மறுமணம் செய்ய முடிவு செய்த இமான் :
விவாகரத்து அறிவிப்பை அடுத்து இமானுக்கு பெண் தேடும் முயற்சியில் அவர்களது குடும்பத்தினர் இறங்கினர். இதையடுத்து சமீபத்தில் தனது மறுமணம் குறித்து பேசிய இமான்.. தான் மறுமணம் செய்து கொள்ளும் பெண் கட்டாயம் விதவை அல்லது விவாகரத்து பெற்ற பெண்ணாக இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்காவது தாயாக இருக்கவேண்டும் என்றும், தனது குழந்தைகளுக்கு அம்மா இடத்தை நிரப்ப வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
d imman
மணக்கோலத்தில் இமான் :
இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்துள்ளது தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இது குறித்தான புகைப்படம் ஒன்றும் உலா வருகிறது. அதில் இமான் மணக்கோலத்தில் பக்கத்தில் புது மனைவியுடன் இருக்கிறார். இவர்களுக்கு அருகில் குட்டி பத்மினி, சங்கிதா, அவரது கணவர் கிரிஷ் வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.