- Home
- Cinema
- வைரமுத்துவின் 5 ஆண்டு கஷ்ட காலம்; அவரது வளர்ச்சியில் முக்கியமாக இருந்த இசையமைப்பாளர் யார் தெரியுமா?
வைரமுத்துவின் 5 ஆண்டு கஷ்ட காலம்; அவரது வளர்ச்சியில் முக்கியமாக இருந்த இசையமைப்பாளர் யார் தெரியுமா?
Music Director Chandrabose Role in Vairamuthu Struggles : கவிஞர் வைரமுத்துவின் கஷ்ட காலத்தின் போது அவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த இசையமைப்பாளர் பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

சினிமா வாழ்க்கையில் 5 ஆண்டுகாலம் கஷ்டப்பட்ட வைரமுத்து
கடந்த 1953 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி மதுரையில் உள்ள மேட்டூரில் பிறந்தவர் தான் கவிஞர் வைரமுத்து. கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் என்று பன்முக கலைஞராக திகழும் வைரமுத்துவின் இயற்பெயர் வைரமுத்து ராமசாமி. சென்னை பச்சையப்பா’ஸ் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார். முதுகலை பட்டம் முடித்த வைரமுத்து சினிமாவில் எண்ட்ரி ஆவதற்கு முன்னதாக டிரான்ஸ்லேட்டராக பணியாற்றியுள்ளார். அதே போன்று கவிஞராகவும் இருந்தார். முதன் முதலாக இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் 1980 ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பாடலாசிரியர் வைரமுத்துவின் வெற்றிக்கு காரணமானவர்
இந்தப் படத்தில் இடம் பெற்ற இது ஒரு பொன் மாலை என்ற பாடலுக்கு பாடல் வரிகள் எழுதி கொடுத்துள்ளார். சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் கடந்த நிலையில் 7500க்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் கவிதைகள் பாடி எழுதியுள்ளார். இதில், 7 தேசிய விருதுகளும் வென்றுள்ளார். இதுவரை எந்த இந்திய பாடலாசிரியரும் இவ்வளவு தேசிய விருதுகள் வென்றதில்லை என்று கூறும் அளவிற்கு 7 தேசிய் விருதுகளை வென்று குவித்துள்ளார். அதுமட்டுமின்றி இலக்கியத்தில் அவரது தொன்றிற்காக பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளை வென்றுள்ளார்.
இளையராஜா - வைரமுத்து மோதல் காரணம்
இப்படி பல சாதனைகளை நிகழ்த்திய வைரமுத்துவிற்கும் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் இருவேறு துருவங்களாக பிரிந்தனர். இளையராஜா இசையில் பணியாற்றிய போது அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. எப்போது இளையராஜாவை விட்டு பிரிந்தாரோ அப்போது அவருக்கு கஷ்ட காலங்கள் ஆரம்பித்துவிட்டது.
வைரமுத்து இளையராஜாவிற்கு மட்டும் பாடல் வரிகள் அமைத்துக் கொடுக்கும் போது இருவருக்கும் இடையில் எந்த விரிசலும் ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில் வைரமுத்து மற்ற இசையமைப்பாளர்களது இசையிலும் பாடல் வரிகள் எழுத இளையராஜாவிற்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியது. அதோடு, வைரமுத்துவின் பாடல் வரிகளில் இளையராஜா திருத்தம் சொல்ல விரிசல் அதிகமாகத் தொடங்கியது. அதன் பிறகு இருவரும் எதிரும், புதிருமாக இளையராஜா இசையில் வைரமுத்து பாடல் வரிகள் வாய்ப்பில்லாமல் போனது.
சந்திரபோஸ் உடன் அறிமுகம்:
கிட்டத்தட்ட 5 வருடங்கள் சினிமா வாய்ப்பில்லாமல் இருந்த வைரமுத்துவிற்கு தமிழில் டப்பிங் செய்யப்பட்ட மற்ற மொழி படங்களுக்கான பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்தார். இப்படியான சூழலில் அவருக்கு சினிமாவில் 2ஆவது இன்னிங்ஸை கொடுத்தது இசையமைப்பாளர் சந்திரபோஸ் தான்.
சந்திரபோஸ் உடன் அறிமுகம்:
இளையராஜா உடனான பிரிவுக்கு பிறகு இசையமைப்பாளர் சந்திரபோஸின் அறிமுகம் கிடைத்தது. அப்போது சந்திரபோஸ் மற்றும் வைரமுத்து இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். அப்படி அவர்கள் இருவரும் இணைந்து சங்கர் குரு, மக்கள் என் பக்கம், மனிதன், கதா நாயகன், தாய்மேல் ஆணை, பாட்டி சொல்லை தட்டாதே, வசந்தி, ராஜா சின்ன ரோஜா, சுகமான சுமைகள், ஆதிக்கம் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளனர். இதில் ஆதிக்கம் படம் தான் இருவரும் இணைந்து பணியாற்றிய கடைசி படம். இந்தப் படம் 2005ல் வெளியானது.
வைரமுத்துவின் வளர்ச்சிக்கு காரணமான படங்கள்
இயக்குநர் கே பாலசந்தர் தனது வானமே எல்லை, அண்ணாமலை மற்றும் ரோஜா ஆகிய 3 படங்களுக்கு வைரமுத்துவை பாடலாசிரியராக ஒப்பந்தம் செய்தார். இதில் வானமே எல்லை என்ற படத்தை பாலசந்தர் இயக்கினார். இந்தப் படத்தில் கீராவாணி இசையமைப்பாளராக பணியாற்றினார். அண்ணாமலை படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இந்தப் படத்தில் தேவா இசையமைப்பாளராக பணியாற்றினார். கடைசியாக ரோஜா படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கினார். இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளர் சந்திரபோஸ்
ரோஜா படத்தில் இடம் பெற்ற சின்ன சின்ன ஆசை என்ற பாடல் தான் வைரமுத்துவிற்கு 2ஆவது தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து அடுத்த 25 ஆண்டுகள் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் வைரமுத்துவின் காம்பினேஷனில் தான் ஏராளமான பாடல்கள் வெளியாகின. அதில் திருடா திருடா, பம்பாய், அலை பாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதன் பிறகு வைரமுத்துவின் சினிமா வாழ்க்கை புதிய உச்சம் தொட்டது