இளையராஜாவுக்கு எம்.பி பதவி..? பரபரக்கும் டெல்லி வட்டாரங்கள்..!
இளையராஜா மோடி பற்றிய தனது கருத்தை வாபஸ் பெற மாட்டேன் என்று பாஜக உறுப்பினர் கங்கை அமரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Ilaiyaraaja
ரசிகர்கள் மனதில் ஆளபதிந்தவர் இசைஞானி இளையராஜா. இவரது பாடல்களுக்கு உலகம் முழுவதும் ஏகபோக ரசிகர் பட்டாளம் உண்டு.
Ilaiyaraaja
இளையராஜா போன்ற முக்கியஸ்தர்கள் பதியும் ஒவ்வொரு கருத்தும் உலகில் உள்ள ரசிகர்களால் கவனிக்க தக்க வகையில் வைரலாவது வழக்கம். ஆனால் சமீபத்தில் இளையராஜாவை ரசித்த அதே ரசிகர்கள் அவரை மிக மோசமாக விமர்சனமும் செய்தனர்.
Ilaiyaraaja
அதற்கு காரணம் மோடியும் அம்பேத்கரும்’ என்ற பெயரில் வெளியான புத்தகத்தில் இளையராஜா எழுதிய முன்னுரையே ஆகும்.
மேலும் செய்திகளுக்கு... பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த வடிவேலு - பிரபுதேவா..மீண்டும் 'சிங் இன் தி ரெயின்'..
Ilaiyaraaja
அந்த புத்தகத்தின் முன்னுரையில் பிரதமர் மோடியை புகழ்ந்து இசைஞானி இளையராஜா: “பிரதமர் மோடி தலைமையிலான அரசின் நிர்வாகத்தினால், நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்கரே பெருமைப்படுவார் என்று இளையராஜா பாராட்டியுள்ளார்.
Ilaiyaraaja
அதோடு மோடி மற்றும் அம்பேத்கர் இருவருக்குமே ஒரு ஒற்றுமை உள்ளது. அவர்கள் இருவருமே ஏழ்மையின் ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் என்பதால் அந்த ஏழ்மையை ஒழிக்க அவர்கள் பாடுபட்டுள்ளார்கள் என்றும் கூறியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு... தெலுங்கு பாடகரான சிம்பு...லிங்குசாமியுடன் அடுத்த கூட்டணி..
Ilaiyaraaja
இளையராஜாவின் இந்த கருத்திற்கு ரசிகர்களும், நெட்டிசன்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தனது சகோதரர் இளையராஜா மோடி குறித்த கருத்தை வாப்பஸ் வாங்க மாட்டார் என கங்கை அமரன் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். கங்கை அமரன் பாஜக உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Ilaiyaraaja
இளையராஜாவின் இந்த கருத்து குறித்து பதிவிட்டுள்ள தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தனது கருத்தை சொல்ல இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உண்டு. வெறுப்பஅரசியலை விதைக்கும் சிலர் அவரை மோசமாக விமர்சிப்பது தவறு என குறிப்பிட்டுள்ளார்.
Ilaiyaraaja
இந்நிலையில் இளையராஜாவுக்கு எம்.பி பதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த பொருளாதார வல்லுநர் சுப்பிரமணிய சுவாமியின் பதவிக்காலம் முடிவடைவதால் அந்த பதவியில் இளையராஜா நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பொருளாதாரம், இலக்கியம், கலை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்த 12 பேரை மாநிலங்களவை உறுப்பினராக ஜனாதிபதியால் நியமிப்படுவது வழக்கம். அந்த வரிசையில் இளையராஜா இடம் பெறுவார் என தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.