பதான் முதல் ராங்கி வரை.. குடியரசு தின ஸ்பெஷலாக இந்தவாரம் தியேட்டர் & OTT-யில் ரிலீசாகும் படங்கள் ஒரு பார்வை
குடியரசு தினமான ஜனவரி 26-ந் தேதி நாடு முழுவதும் விடுமுறை தினம் என்பதால், இந்த வாரம் ஏராளமான திரைப்படங்கள் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் ரிலீஸாக உள்ளன. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தியேட்டரில் ரிலீசாகும் தமிழ் படங்கள்
பொங்கலுக்கு வெளியான வாரிசு மற்றும் துணிவு படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் கடந்த வாரம் தமிழ்நாட்டில் பெரியளவில் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆக வில்லை. இருப்பினும் இந்த வாரம் பிகினிங் மற்றும் மெய்ப்பட செய் என்கிற நேரடி தமிழ் படங்களுடன் மூன்று டப்பிங் படங்கள் வெளியாகின்றன. அவை நண்பகல் நேரத்து மயக்கம், மாளிகப்புரம், பதான் ஆகிய படங்களாகும். இதில் நண்பகல் நேரத்து மயக்கம், மாளிகப்புரம் ஆகிய இரு படங்களும் மலையாள படத்தின் டப்பிங் ஆகும். அதேபோல் பதான் இந்தி பட டப்பிங் ஆகும்.
தியேட்டரில் ரிலீசாகும் பிறமொழி படங்கள்
பிறமொழிகளை பொறுத்தவரை மலையாளத்தில் அலோன் மற்றும் தன்கம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதேபோல் தெலுங்கில் ஹண்ட், செந்தூரம், தீரா ஆகிய படங்களும் கன்னட மொழியில் ஆர்சி பிரதர்ஸ் என்கிற படமும் ரிலீசாக உள்ளன. இந்தியைப் பொறுத்தவரை ஷாருக்கானின் பதான் திரைப்படம் இன்று மிகபிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... வாரிசு படத்தின் சக்சஸ் பார்ட்டிக்கு ‘தளபதி 67’ கேங்ஸ்டர் லுக்கில் வந்த விஜய் - வைரலாகும் போட்டோஸ்
ஓடிடியில் ரிலீசாகும் தமிழ் படங்கள்
ஓடிடியை பொறுத்தவரை இந்த வாரம் தமிழில் அயலி என்கிற வெப் தொடர் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த வெப்தொடர் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் எங்க ஹாஸ்டல் என்கிற வெப் தொடரும் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. படங்களில் திரிஷா நடிப்பில் கடந்த மாத இறுதியில் திரையரங்கில் ரிலீஸ் ஆன ராங்கி திரைப்படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாக இருக்கிறது.
ஓடிடியில் ரிலீசாகும் பிறமொழி படங்கள்
பிறமொழிகளை பொறுத்தவரை தெலுங்கில் 18 பேஜஸ் என்கிற திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. அதேபோல் மலையாளத்தில் சாட்டர்டே நைட் (ஹாட்ஸ்டார்), ஆங்கிலத்தில் ஷாட் கன் வெட்டிங் (அமேசான்), இந்தியில் ஜான் பாஸ் இந்துஸ்தான் ஹே (ஜீ5), ஆக்ஷன் ஹீரோ (நெட்பிளிக்ஸ்) ஆகியபடங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.
இதையும் படியுங்கள்... என் வாழ்வில் ஆனந்தத்தை அள்ளித்தவளே... மகளின் 20-வது பிறந்தநாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடிய குஷ்பு