MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜில் ஜங் ஜக் முதல் நாய்சேகர் வரை... பட தலைப்புகளாக மாறிய வடிவேலுவின் சூப்பர் ஹிட் டயலாக்ஸ் ஒரு பார்வை

ஜில் ஜங் ஜக் முதல் நாய்சேகர் வரை... பட தலைப்புகளாக மாறிய வடிவேலுவின் சூப்பர் ஹிட் டயலாக்ஸ் ஒரு பார்வை

வடிவேலு பேசிய சூப்பர் ஹிட் வசனங்களை படத் தலைப்புகளாக வைக்கப்பட்ட நிகழ்வுகள் தமிழ் சினிமாவில் ஏராளம் நடந்துள்ளன. அதன் தொகுப்பை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 30 2024, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Movie Titles based on Vadivelu Dialogues

Movie Titles based on Vadivelu Dialogues

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடிக்கு சிரிக்காத ஆளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு தன்னுடைய நகைச்சுவையால் மக்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்தவர் வைகைப்புயல் வடிவேலு. அவர் பேசிய காமெடி வசனங்கள் படத்தலைப்புகளாக மாறிய சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. அப்படி வடிவேலு பேசிய வசனங்களை தலைப்பாக வைத்த படங்கள் பற்றி பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Naanum Rowdy Dhaan

Naanum Rowdy Dhaan

நானும் ரெளடி தான்

தலைநகரம் படத்தில் போலீஸ் ஜீப்பில் ஏறிக்கொண்டு நான் ஜெயிலுக்கும் போறேன் நானும் ரெளடி தான் என்கிற வசனத்தை வடிவேலு பேசி இருப்பார். இந்த வசனம் பின்னர் படத்தலைப்பாக மாறியது. கடந்த 2015-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த படத்துக்கு நானும் ரெளடி தான் என பெயரிடப்பட்டு ரிலீஸ் ஆனது. அந்த டயலாக்கை போல் படமும் சூப்பர்ஹிட் ஆனது.

37
Jill Jung Juk

Jill Jung Juk

ஜில் ஜங் ஜக்

ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1994-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் காதலன். அதில் பெண்களை வர்ணிக்கும் விதமாக வடிவேலு ஜில் ஜங் ஜக் என்கிற வசனத்தை பேசி இருப்பார். அந்த வசனம் கடந்த 2012-ம் ஆண்டு தீரஜ் வைத்தி இயக்கத்தில் சித்தார்த் நடித்த டார்க் காமெடி படத்துக்கு தலைப்பாக வைக்கப்பட்டது.

47
Trisha Illana Nayantara

Trisha Illana Nayantara

த்ரிஷா இல்லேனா நயன்தாரா

தலைநகரம் திரைப்படத்தில் வடிவேலு பேசிய காமெடி வசனங்கள் அனைத்தும் வேறலெவல் ஹிட் அடித்தன. அதில் த்ரிஷா இல்லேனா திவ்யா என்கிற வசனத்தையும் அவர் பேசி இருப்பார். அந்த வசனத்தை தழுவி தான் ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த அடல்ட் காமெடி படத்துக்கு த்ரிஷா இல்லேனா நயன்தாரா என பெயரிட்டனர்.

இதையும் படியுங்கள்... லிஃப்ட் கதவு மூடியதும் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.. சீனியர் நடிகருக்கு பளார் என அறைவிட்ட நடிகை உஷா

57
Plan Panni Pannanum

Plan Panni Pannanum

பிளான் பண்ணி பண்ணனும்

பிரபுதேவா இயக்கிய போக்கிரி படத்தில் வடிவேலு பேசிய எபிக் டயலாக் தான் பிளான் பண்ணி பண்ணனும். இந்த டயலாக்கை டைட்டிலாக வைத்து பத்ரி வெங்கடேஷ் இயக்கிய படம் தான் பிளான் பண்ணி பண்ணனும். இப்படத்தில் ரியோ ராஜ் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்தார்.

67
Varuthapadatha Valibar Sangam

Varuthapadatha Valibar Sangam

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வடிவேலு பேசிய டயலாக் மட்டுமின்றி அவர் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் சிலவும் படத் தலைப்புகளாக மாறி இருக்கின்றன. அப்படி வின்னர் படத்தில் வடிவேலு வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவராக நடித்திருப்பார். அதனை படத்தலைப்பாக மாற்றி வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்கிற பெயரில் படமெடுத்தார் பொன்ராம். அதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார்.

77
Naai Sekhar

Naai Sekhar

நாய்சேகர்

வடிவேலுவின் மற்றுமொரு ஐகானிக் கேரக்டர் நாய்சேகர். தலைநகரம் படத்திற்காக அவர் நடித்த இந்த கேரக்டர் வேறலெவலில் பிரபலமானது. இந்த தலைப்பில் நாய்சேகர் மற்றும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்கிற இரு படங்கள் தயாராகின. அதில் நாய்சேகர் படத்தில் சதீஷும், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவும் ஹீரோவாக நடித்திருந்தனர்.

இதையும் படியுங்கள்... கர்ப்பமாக இருந்த போது, வயிற்றில் எட்டி உதைத்தார்... கொடுமைப்படுத்திய நடிகர் முகேஷ் - நடிகை சரிதா கண்ணீர்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வடிவேலு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved