வாவ்... எந்த காமெடி நடிகரும் போடாத கெட்அப்! பப்ஜி வீரராக மாறி தெறிக்கவிடும் மொட்டை ராஜேந்திரன்!
பவுடர் பட இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கத்தில் வித்யா பீரதிப், நிகில் முருகன் சிங்கப்புலி, மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்தில் தான் பப்ஜி வீரராக நடித்து அசத்தியுள்ளார் மொட்டை ராஜேந்திரன். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்த படத்தின் படபிடிப்பு முடிந்து திரைக்கு கொண்டுவரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக தடைப்பட்டிருந்த பப்ஜி படப்பிடிப்புகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.
அதில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் பப்ஜி வீரராக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது.
நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன், ஐஸ்வர்யா தத்தா, மைம்கோபி, அனித்திரா நாயர், சாந்தினி தேவா, லட்சுமி, ஜூலி, ஆதித்யா கதிர், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர்.
பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய படபிடிப்பு வேகமாக நடந்து வருகிறது .ஊரடங்கு முடிவடைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் இந்த வருட இறுதியில் படம் திரைக்கு கொண்டுவர உள்ளதாக படத்தாயரிப்பு நிறுவனம் ஜி மிடியா தெரிவித்துள்ளது. மொட்டை ராஜேந்திரனின் பப்ஜி காட்சியே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.